புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை ,வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நேற்று (06) திறக்கப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக சுமார் 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டது. தற்போதைய நாட்டு சூழலும் பொருளாதார நெருக்கடியும் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் மருத்துவம் சார் தேவைகளும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் பாதிப்புகளை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு குட்பட்ட பகுதியான … Read more

கொழும்பு மாவட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு (WHO) கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 05ம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2052 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக WHO இலங்கை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் 1050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த வாரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர … Read more

இலங்கையில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருவதால் எதிர்காலத்தில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க போதிய வருமானம் இல்லாததால் இந்த நிலை ஏற்படலாம். கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் மே மாதத்தில் 39.1% ஆக உயர்ந்துள்ளது, முந்தைய மாதத்தில் 57.4% ஆக இருந்தது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டில் பல … Read more

8ம் திகதி வரை எரிவாயு சிலிண்டர் விகியோகம் இடம்பெறாது

எரிவாயு விலை மறுசீரமைப்பு தொடர்பான சமூக ஊடக செய்திகள் பொய்யானவை என LITRO Gas Lanka Limited தெரிவித்துள்ளது. மேலும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை (8) வரை விநியோகிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார். போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கொண்டு வரும் … Read more

மட்டக்களப்பில் நவீன சந்தை தொகுதி திறப்பு

உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு, மாநகர சபையின் பொதுச் சந்தை இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபை சந்தையிலே குறித்த விற்பனை நிலயங்கள் நீண்ட காலமாக மேல்த்தளத்தில் இயங்கி வந்த நிலையில் மேல்த்தளத்திற்கு சென்று மீன் மற்றும் இறைச்சியை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் எதிர்கொண்ட சிக்கல் நிலைமையினை கருத்திற் கொண்டு குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் … Read more

முடிவுக்கு வந்தது விமான விவகாரம் – இலங்கைக்கு நன்றி தெரிவித்த ரஷ்யா

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் தொடர்பான சிக்கலைத் தீர்த்தமைக்காக இலங்கை அதிகாரிகளுக்கு ரஷ்ய விமானப் போக்குவரத்துக்கான பெடரல் முகமை (ரோசாவியட்சியா) தனது நன்றிகளை தெரிவித்துள்ளது. ஏரோஃப்ளோட் விமானம் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த உத்தரவை இலங்கை நீதிமன்றம் இன்றைய தினம் இடைநிறுத்தியது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றம் பரிசீலித்ததை அடுத்து இந்த உத்தரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் கொழும்பில் இருந்து மாஸ்கோவிற்கு புறப்பட்டதை ஏரோஃப்ளோட் நிறுவனம் … Read more

மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உணவுப் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அதிகளவான விலங்குகளை கொடூரமான விலங்குகள் நடமாடாத சரணாலயங்களில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமகாந்த அறிவித்துள்ளார். மிருகக்காட்சிசாலையில் ஒரு இனத்தைச் சேர்ந்த நான்கு விலங்குகளை மாத்திரம் மக்கள் பார்வைக்கு வைத்தல் போதுமானது. வனவிலங்கு திணைக்களத்தின் அனுமதியுடன் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மான் போன்ற விலங்குகள் விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் … Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய 12 வயது சிறுமி! மூங்கிலாற்றில் சம்பவம் (Photos)

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மூங்கிலாறு வடக்கு பகுதியில் 12 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் இரவு நித்திரை கொள்ளச் சென்ற குறித்த சிறுமி அதிகாலையில் வீட்டிலிருந்து காணாமல் போனாதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை  வீட்டிலிருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில், தன்னை … Read more

இந்தியாவில் 3 மாதங்களில் இல்லாத வகையில் கொரோனா அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 4 ஆயிரத்து 518 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று 4 ஆயிரத்து 270 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,544, மகாராஷ்டிராவில் 1,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 107 பேருக்கு தொற்று உறுதியாகிவுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 779 … Read more