ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள்: பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்

ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை பொறுப்பேற்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். விமானப் பயண சிக்கல் காரணமாக ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை தபால் அலுவலகங்களில் உள்ள கருமபீடங்களில் பொறுப்பேற்காமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இந்த சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுவருகின்றது. அதேபோல் மாற்று பயணப் பாதை ஊடாக ரஷ்யாவுக்கு அஞ்சல் பொருட்களை அனுப்பி வைக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எனினும் பொறுப்பேற்கப்படும் அஞ்சல் பொருட்கள் சம்பந்தப்பட்ட அடைவிடத்திற்கு செல்ல தாமதமடையலாம் என்று தபால்மா … Read more

தேவாலயத்தினுள் வைத்து கொலை செய்யப்பட்ட வணபிதா சந்திராவின் நெகிழ வைக்கும் சரித்திரம்

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற்பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம் என்பது வரலாறு. இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலை காணப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க வேண்டிய காலத்தின் கட்டாயம் எமக்கு உள்ளது. அருட்தந்தை சந்திரா மட்டக்களப்பில் அருட்தந்தை சந்திரா என்று எல்லோராலும் … Read more

இலங்கைக்கு பங்களாதேஷ் உருளைக்கிழங்கு

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கு பங்களாதேஷ் முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் பங்களாதேஷ் இல் இருந்து உருளைக்கிழங்கு,இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆலோசித்துவருகிறார். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் கணபாபனில் வீரகோனை  சந்தித்த போது பங்களாதேஷ் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று நோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் உணவுப் பிரச்சினையை எதிர் கொண்டுள்ளதாகவும், அதிகளவு உணவுப் பயிர்களை … Read more

நாளை பாராளுமன்றத்தில் 69 ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை

அத்தியாவசிய அரச சேவையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் 69 ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளார். குறைநிரப்புப் பிரேரணை தொடர்பான விவாதம் நாளை மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது. பிரேரணையை சமர்ப்பித்ததன் பின்னர், நாட்டின் தற்போதைய நிலை குறித்து விசேட கூற்றொன்றை முன்வைத்து பிரதமர் உரையாற்றயுள்ளார். சபை ஒத்திவைப்பு மீதான விவாதமும் நாளை இடம்பெறவிருக்கிறது. பாராளுமன்றம் இம்மாதம் 10ஆம் திகதி வரை கூடவிருக்கிறது.  

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இயற்கை விவசாய நடவடிக்கை ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இயற்கையான முறையிலமைந்த அலுவலக உணவுப் பயிர் தோட்டத்தினை அமைக்கும் நிகழ்வு இன்று(06) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது. ஓன்றாக வளர்வோம் : நாட்டை வெல்வோம் – உணவுப் பயிர் உற்பத்திப் போர் 2022″ எனும் தொனிப்பொருளில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது விவசாய போதனாசிரியர்களால் அனைத்து அலுவலர்களுக்கும் பயிர்ச் செய்கை செயன்முறைகள் தொடர்பான விளக்கவுரைகள் வழங்கப்பட்டன. இயற்கை உரம் தயாரித்தல், பைகளில் பயிரிடுவதற்கான மண் , நாற்று மேடை … Read more

குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தல்

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளில் அதிக கவனம் செலுத்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கை அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் சேனக கமகே கூறுகையில், வீடுகளில் பயிரிடக்கூடிய அனைத்து மரக்கறிகள் மற்றும் செடிகளையும் கட்டாயம் பயிரிட வேண்டும் எனவும் நாடு பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கலாநிதி கமகே தெரிவித்துள்ளார். முருங்கை இலைகளில் இரும்பு, … Read more

டின் மீனின் விலையும் அதிகரித்தது

சந்தையில் தற்போது பெரிய டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.   நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  சடுதியாக உயர்வடைந்த விலை இவ்வாறான நிலையில் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்ததை விட தற்போது மிக  அதிக விலைக்கு டின் மீன் விற்பனை  செய்யப்பட்டு வருகின்றது.  இதுவரை ஒரு பெரிய  டின் மீனின்  விலை 450 முதல் 500 ரூபாய் வரை இருந்தது. மேலும், முட்டை, இறைச்சி, … Read more

தாராள உதவிகளுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லேவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 02ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, உணவு, எரிபொருள், உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இலங்கைக்கு தற்போது வழங்கப்படும் உதவிகள் குறித்து உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் அவர் … Read more

முச்சக்கரவண்டி சாரதி பயணியிடம் கைவரிசை

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் ,வாடகைக்கு சென்ற பெண் ஒருவரிடம் ,ரூபாய் 8 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் உட்பட பல ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தனது தனிப்பட்ட தேவை நிமித்தம் கொடகமைக்குச் சென்று மீண்டும் வீடு செல்வதற்காக வீதியில் நின்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு வந்த முச்சக்கரவண்டியில் சென்ற போதே சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதி ,பெண்ணை பாழடைந்த இடம் ஒன்றிற்கு அழைத்துச் … Read more

யாழில் விளையும் திராட்சையின் விலை ஆயிரம் ரூபாய்

இம்முறை யாழில் விளைந்த திராட்சைப் பழங்கள் இன்று முதல் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  யாழில் விளையும் ஒரு கிலோ திராட்சைப் பழத்தின் விலை 1000 ரூபாவைத் தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.  குறைவடைந்துள்ள திராட்சை இறக்குமதி  எவ்வாறாயினும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் திராட்சைப் பழங்களின் விலை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் திராட்சையின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் யாழில் விளையும் திராட்சைக்கு … Read more