உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக,உணவு உற்பத்திக்காக வீட்டுத் தோட்ட உற்பத்தி திட்டம்

தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இது நடைமுறைப்படுத்தப்படுமென்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும். விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அமைச்சர் … Read more

உடலில் சிவப்பு கொப்புளங்கள் ஏற்படலாம்! குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் உள்ள பெற்றோர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.   இதன்படி, கொழும்பு உள்ளிட்ட பல பிரதேங்களில் உள்ள சிறுவர்களுக்கு தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  உடலில் சிவப்பு கொப்புளங்கள் வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. … Read more

சீனத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் 2022 ஜூன் 02ஆந் திகதி அமைச்சில் வைத்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போது, தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன், இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார். குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் … Read more

நாட்டின் சில பிரதேசங்களின் நாளைய தினம் முற்றாக முடங்கும் பேருந்து சேவை

நாட்டில் சில பகுதிகளில் நாளையதினம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.   தனியார் பேருந்து சேவை முடங்கும் பிரதேசங்கள்  தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பேருந்து சேவையில் ஈடுபடாது.  குறித்த பகுதிகளின் டிப்போக்கள் ஊடாக டீசல் விநியோகம் செய்யப்படாத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் … Read more

எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பு! ஏழாயிரம் ரூபாவை அண்மித்தது

லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  உடனடி விநியோகத்திற்கு நடவடிக்கை  3500 மெட்ரிக் டன் லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்களை மக்களுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் சமையல் நிறுவனம் அறிவித்துள்ளது. Source link

இந்தியா வழங்கும் உரம் இன்னும் சில நாட்களில் இலங்கையை வந்தடையும்

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உரம் இன்னும் சில நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள விடயம்  இந்தியா தனது உரத் தேவையை ஓமான் நாட்டிலிருந்தே பெற்றுக் கொள்வதாகவும், அந்த வகையில் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த உரம் ஓமான் நாட்டில் கொள்வனவு செய்யப்பட்டு கப்பல் மூலம் … Read more

உலக சுற்றாடல் தினம் இன்று

.உலக சுற்றாடல் தினம் இன்றாகும். இத்தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான சுற்றாடல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும். இலங்கையில் சுற்றாடல் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மரக்கன்று நடுகை உட்பட இன்னும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, மானிட சுற்றாடல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு அந்த வருடம் ஜுன் மாதம் ஐந்தாம் … Read more

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை

தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு … Read more

சுவசெரிய மன்றத்திற்கு மருந்துப்பொருட்கள் கையளிப்பு

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 3.3 தொன்கள் நிறையுடைய அத்தியாவசிய மருத்துவப் பொருள் தொகுதியானது, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி.ஹர்ஷ டி சில்வா மற்றும் சுவசெரிய மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சொஹான் டீ சில்வா ஆகியோரின் பிரசன்னத்துக்கு மத்தியில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் சுவசெரிய மன்றத் தலைவர் திரு துமிந்த ரத்நாயக்க அவர்களிடம் 2022 ஜூன் 03ஆம் திகதி கொழும்பில் கையளிக்கப்பட்டது. 2.         2022 மார்ச் மாதம் வெளியுறவுத்துறை … Read more