மாத்தளையில் ஆதரவற்ற குடும்பத்திற்கு தையல் இயந்திரம்

மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்னவின் பணிப்புரையின் பேரில், மாவட்ட செயலக ஊழியர்களின் உதவியுடன் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு ஜுக்கி தையல் இயந்திரம் அண்மையில் பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டது. சமூக சேவை உத்தியோகத்தர் தர்மரத்ன ,ஆதரவற்ற குடும்பத்தை அடையாளம் கண்டதையடுத்து இந்த குடும்பத்திற்கான ஜுக்கி தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட மேலதிக செயலாளர் நிஷாந்த கருணாதிலக மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஏற்படும் மற்றொரு சிக்கல் நிலை

முட்டை, கோழி இறைச்சி, திரவப் பால் போன்றவற்றின் நுகர்வு படிப்படியாகக் குறைவடைந்துள்ள நிலையில், சத்துணவு தொடர்பில் இலங்கையில் மற்றுமொரு சிக்கல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் முட்டை, கோழி இறைச்சி மற்றும் திரவ பால் கொள்வனவு வெகுவாக குறைவடைந்து வருவதாக விவசாயத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  மூலப்பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என அதன் செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.  இலங்கையில் ஏற்படப் போகும் மற்றுமொரு சிக்கல் … Read more

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படும்

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணிவரையான ஏழு மணித்தியால நீர் விநியோகத்தடை இடம்பெறவுள்ளது. எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலப்பத்பிட்டிய, உடாஹமுல்ல, எம்புல்தெனிய மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் jilgLk;.. இதேவேளை, கொழும்பு ஒன்று தொடக்கம் கொழும்பு 04 வரையும், … Read more

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை இன்று ஆரம்பம்

கொழும்பு கோட்டை – மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவை இன்று(04) பிற்பகல் தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகும் என ரயில்வே கட்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலான ரயில் இன்று பிற்பகல் 03.05ற்கு புறப்படும்.

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை

கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளார். தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், சுகாதாரத்துறையில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, சுகாதார அமைச்சின் … Read more

19 வயகுக்குட்பட்டோருக்கான புதிய லீக் தொடர் இம்மாதம் ஆரம்பம்

19 வயகுக்குட்பட்டோருக்கான புதிய லீக் தொடர் இம்மாதம் ஆரம்பம் 19 வயதுக்குட்பட்ட வீரர்களை இலக்காகக் கொண்ட இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்ய இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியைத் தயார்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டித் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. இப்போட்டித் … Read more

முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். கலந்துரையாடப்பட்ட விடயங்கள்  நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து முச்சக்கரவண்டி தொழிற்துறையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   Source link

தொலைநோக்குடன் கூடிய தலைவர் இலங்கையில் இல்லை! எரிக் சொல்ஹெய்ம் பகிரங்க அறிவிப்பு

ராஜபக்சக்களின் வீழ்ச்சியின் வேகம் பல சர்வதேச அவதானிகளிற்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச பரம்பரையின் எதிர்பாராத வீழ்ச்சி ராஜபக்சவினர் மிகப்பெரும் பெரும்பான்மையைப் பெற்று மூன்று வருடங்களே ஆகின்றன. அதிகாரத்தை ஒரே குடும்பத்திடம் அதிகளவு குவித்தமையும், பொருளாதாரத்தை திறமையற்ற விதத்தில் கையாண்டமையும் இந்த வீழ்ச்சிக்கு காரணம். கோவிட் வைரஸ் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வராததால் பெருமளவு வருமானத்தையும், வெளிநாட்டில் உள்ள இலங்கை … Read more

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இந்திய உரம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் உரம் கிடைக்கும் என்பதை விவசாய அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ். யோகவேள் தெரிவித்தார். அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர்களுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு ,அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எச். சமரகோன் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் 02.06.2022 விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சமகாலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் … Read more

பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களிலும் உணவுப் பயிர்களைப் பயிரிட ஆரம்பியுங்கள்…ஜனாதிபதி பணிப்புரை

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த தோட்டங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தேயிலை ஏலம் டொலர்களில்… பெருந்தோட்டத் துறையின் தேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை… அனைத்துப் … Read more