லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் – செய்திகளின் தொகுப்பு

மறு அறிவித்தல் வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு (12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம்) விநியோகம் நடைபெற மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. “எம்மிடம் தற்போதைய இருப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டன, மறு அறிவித்தல் வரும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களை கேட்டுக் கொள்கிறோம்” என்று மூத்த லிட்ரோ நிறுவன அதிகாரி கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய … Read more

இலங்கையில் வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகன விலைகள் அதிகரிப்பு டொலர் தட்டுப்பாடும், வட் வரி உயர்வுமே இதற்கு காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கார் டயர் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாகனங்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் … Read more

வலியை உணரக்கூடிய "எலக்ட்ரானிக் தோலை" உருவாக்கி இந்திய வம்சாவளி பொறியாளரின் குழு சாதனை

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா தலைமையிலான பொறியாளர்கள் குழு “வலியை” உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல் பள்ளியின் பேராசிரியராக உள்ள நிலையில், இந்த சாதனையை படைத்துள்ளார். எலக்ட்ரானிக் தோலின் பயன்கள் இது குறித்து ரவீந்தர் எஸ் தஹியா கூறுகையில், “இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற உணர்திறன் கொண்ட புதிய தலைமுறை ஸ்மார்ட் … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் … Read more

இன்றைய மின் துண்டிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)  இன்று (04)சனிக்கிழமை ஒரு மணிநேரம் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.  

"ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம்"

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மத்திய வங்கியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்து தனது நண்பரான தினேஸ் வீரக்கொடிக்கு பதவியை வழங்குமாறு பிரதமர் கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். கோபமடைந்த ஜனாதிபதி  எவ்வாறாயினும் இதற்கு ஜனாதிபதி தனது … Read more

கஜபா படையணியின் 'வீரர்களின் புயல்' கொபி புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கஜபா படையணியின் படைவீரர்களான புதிய பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே ஆகிய இருவரும் அவர்களின் சிறந்த படையணிக்கு நிரந்தர நினைவுகளைச் சேர்க்கும் வகையில், படையணியின் வரலாற்றின் பாரம்பரியம், அது நிறுவப்பட்டதில் இருந்து பரிணாமம், அதன் உள்கட்டமைப்பு வளர்ச்சி, ஒப்பிடமுடியாத இயற்கையின் போர்க்கள சாதனைகள், வீரம் மற்றும் தாய்நாட்டின் விடுதலையில் அதன் போர்வீரர்களின் இணையற்ற பங்களிப்பு போன்றவற்றை ஆவணப்படுத்திய புத்தகமான ‘போர்வீரர்களின் புயல்’ … Read more

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்கு நாளைய தினம் (04) ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு  நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவில் உள்ளடங்கியுள்ள விடயம் மேலும், கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

அரச காணிகளில், பலாக்காய்களை பறிக்க பொதுமக்களுக்கு அனுமதி

வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் பலாக்காய்களை பறிப்பதற்கு அனுமதிப்பத்திரங்களை பொதுமக்களுக்கு வழங்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் இந்த ஆண்டு பலா மரங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர். அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 ஹெக்டேர் … Read more

தனிநபரொருவர் வீட்டில் சேமித்து வைத்துள்ள டீசல் களஞ்சியசாலை

அம்பந்தோட்டை – மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல் இதன்போது, 1,700 லீற்றர் டீசல் விசேட அதிரடிபடை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் டீசலை சேமித்து வைத்துள்ள நபர் … Read more