அமெரிக்க டொலரொன்றின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 365 ரூபா 28 சதமாக பதிவாகியுள்ளது.  அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி  355 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோவொன்றின் பெறுமதி  மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 393 ரூபா 95  சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 09 சதமாகவும் பதிவாகியுள்ளது.   பவுண்ட் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் … Read more

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மத ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மத ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின்போது தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பாதுகாப்பு, அத்தியாவசிய சேவைகள் உட்பட பலதரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போதைய இடரான நெருக்கடியான சூழலிலே மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை எவ்வாறு முகம்கொடுத்து மக்களுக்கு சுமூகமான சூழலை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான எட்டு விடயங்கள் அடங்கி ஆலோசனைகளை குறித்த … Read more

சீரற்ற காலநிலை: மீண்டும் “டெங்கு”

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், 2022 ஆம் ஆண்டில் 24,523 சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமான பயணிகளின் நிலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த Aeroflot விமானத்தின் பயணிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் விமானங்கள் மூலம் மொஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். Aeroflot நிறுவனத்தின் இலங்கை அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி புறப்படவிருந்த விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதிக்கப்படாமல் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளின் நிலை விமான குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விமானத்தில் இருந்த … Read more

2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை

2022 ஆம் ஆண்டுகான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இந்த வருடம் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், பாடசாலை சீருடை விநியோகம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் … Read more

இந்தியாவில் புதிதாக 4,041 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்திய  சுகாதாரத்துறை இன்று (03) வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஓய்ந்து தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவான நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,745 ஆக இருந்தது. நேற்று 3,712 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று … Read more

ரஷ்யாவை இலங்கை தவிர்ப்பது ஏன்….! காரணத்தை வெளியிட்ட தொழிற்சங்கம்

அண்மையில் இலங்கைக்கு வந்த கச்சா எண்ணெய் தாங்கிய கப்பல், டுபாய் நாட்டை சேர்ந்த முகவர் ஒருவரால் கொண்டு வரப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது. அவர் நாட்டில் பிரபலமான அரசியல்வாதி ஒருவரின் மகனின் நண்பர் என இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் பெற்றோலிய கிளையின் இணைத் தலைவர் ஜகத் விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார். இடைத்தரகர்கள் மூலம் எண்ணெய் கொள்முதல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிற்சங்க நடவடிக்கை நாடுகளுக்கு நாடுகள் எண்ணெய் பெறுவதற்கான முறையான அமைப்பை நிறுவ வேண்டும் … Read more

அம்பகமுவ மக்களுக்கு, இந்திய மனிதாபிமான உதவி பொருட்கள்

இலங்கைக்கு அண்மையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட   நன்கொடை பொருட்கள் இன்று (03) அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் தோட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக  அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தர கமகே தெரிவித்துள்ளார்.  புகையிரதத்தில் ஹட்டனுக்கு கொண்டுசெல்லப்பட்ட உதவி பொருட்க ளை நேற்று (02) ஹட்டன் புகையிரத நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.  மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கு அமைய நாளை முதல் இந்த உதவி பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   … Read more

1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கொவிட் தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். கொவிட் நிதியத்திலிருந்து உதவி உலக சந்தையில் மருந்துப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், உள்நாட்டில் மருந்து உற்பத்தியை துரிதப்படுத்தி, தேவையான … Read more