ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யகைது செய்ய

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக இரண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குருநாகல் மற்றும் கொழும்புக்கு சென்றுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம் திகதி “Go Home” கிராமங்களின் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் சந்தேகநபர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று முன்தினம் (01) சந்தேகநபர்களாக பெயரிட்டுள்ளளனர்.

கொழும்பில் ஹெரோயின்: இருவர் கைது!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (02), 3.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 15 இல் வசிக்கும் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் இன்று(3) மாலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். அத்துடன் … Read more

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி

Courtesy: தி.திபாகரன் M.A “” எதிர்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடியை  இலங்கை  சந்திக்கும்”” என பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க  குறிப்பிடுகிறார். இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்வது மிகக் கடினமானது என்பதுவும், இலங்கை அரசால் இந்த  நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாது போகலாம் என்ற செய்தியும் மறைந்துகிடக்கிறது. எனவே இத்தகைய பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதை பற்றி நோக்குவது அவசியமானது. “”கடந்த 30 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை செய்தோம் அதனுடைய விளைவினால் … Read more

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு, இலங்கை கிரிக்கெட்இலங்கை கிரிக்கெட்

இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 2கோடியே 25 இலட்சம் ரூபாவை செலவிடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நேற்று (2) இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி டி சில்வாவிற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் இடையில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

கணிப்பீட்டு முகாமில் காவத்தமுனை அல் அமீன் மகா வித்தியாலயம் 2 ம் இடம்  

கடந்த மே மாதம் 05ம் திகதி இடம்பெற்ற 38வது படைப்பிரிவின் தெரிவு முகாமில், ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட காவத்தமுனை அல்-அமீன் மகா வித்தியாலய பாதுகாப்பு கடெட் அணியினர் இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளனர். அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றி படைப்பிரிவின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 05 பாடசாலை அணிகளுள் அல்-அமீன் மகா வித்தியாலய பாதுகாப்பு கடெட் அணியினர் இவ்வாறு தெரிவாகியுள்ளனர். அதன் பின்னர் 2022.05.20 முதல் 2022.05.26 வரை ரன்தம்பே பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கிடையிலான கணிப்பீட்டு முகாமிலும் … Read more

அமெரிக்க டொலரொன்றின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 365 ரூபா 28 சதமாக பதிவாகியுள்ளது.  அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி  355 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோவொன்றின் பெறுமதி  மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 393 ரூபா 95  சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 09 சதமாகவும் பதிவாகியுள்ளது.   பவுண்ட் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் … Read more

அச்சுறுத்தல்கள் உள்ளன: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்

பிரிவினைவாதத்தை கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் அதன் மறைமுக ஆதரவுக் குழுக்களால் கணிசமான அச்சுறுத்தல்கள் உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள் அவர் மேலும் தெரிவிக்கையில், பிரிவினைவாதத்தை கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் … Read more

இலங்கை பிரிவினைக்கு இணங்கினால் 52 பில்லியன் டொலர் வழங்க தயார்! பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு அதிரடி

இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52 பில்லியன் டொலர் (5200 கோடி) வெளிநாட்டு கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக உள்ளதாக “பைடனுக்கான தமிழர்கள்” இயக்குனர் அறிவித்துள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பான அவர்களது செய்திக் குறிப்பில், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் பொருளாதாரச் சிக்கலின்றி வாழக்கூடியது. தமிழ் தேசத்தில் பொருளாதாரம், பிற நிறுவனங்களை நடத்துவதற்கு புலம்பெயர் தேசத்தின் திறமையான உறுப்பினர்களை தமிழர்கள் கொண்டு வருவார்கள். இலங்கை இணக்கமான பிரிவினைக்கு … Read more

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் தீவிர உணவு பற்றாக்குறை

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தற்போது மருந்துகளுக்கு மேலதிகமாக கடுமையான உணவு நெருக்கடியை அனுபவித்து வருவதாக வைத்தியசாலை தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  சிறுவர்களின் சரியான வளர்ச்சிக்கு புரதம் உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்றாலும் தற்போது நோயாளிகளாக உள்ள குழந்தைகளின் தினசரி உணவில் இறைச்சி, மீன், முட்டை, பருப்பு ஆகிய ஒன்றும் இல்லை என தெரியவந்துள்ளது. தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில சிறுவர்களுக்கு தினமும் 10 முட்டைகள் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது கொடுக்க … Read more