செப்டம்பரில் கொழும்பு நகரில் உணவு தீர்ந்துவிடும் – மேயர் எச்சரிக்கை

இன்னும் மூன்று மாதங்களில் கொழும்பு நகரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க எச்சரித்துள்ளார். உணவு கையிருப்பு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இருக்கும் என எச்சரிக்கை விடுத்த மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு மாநகர சபை (CMC) விரைவில் நகருக்குள் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்கும் என்று தெரிவித்தார். நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கப்படும் அதே வேளையில் … Read more

அட்டலுகம சிறுமி கொலை:சந்தேக நபர் முன்னரும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி

அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், இதற்கு முன்னரும் அப்பகுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் இரகசியமாக பிரவேசித்த சந்தேக நபர், அவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் தெரிவிக்கையில், “நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தேன். சம்பவ தினத்தன்று நான் எனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் … Read more

பசிலுடன் சஜித் டீல் – ரணிலுடன் கூட்டு சேரும் சம்பிக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது பிரிவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் ஏற்பட்ட கைச்சாத்திடலே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரணிலுடன் … Read more

சீரற்ற கால நிலை: செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும்

நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தென்மேற்கு பருவமழை மே 18 முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போதைய சீரற்ற கால நிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். இதனால் காலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார். தற்போது நிலவும் காலநிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட … Read more

இந்த ஆண்டு மீளச் செலுத்துவதற்காக இலங்கைக்கு 5 பில்லியன் டொலர்கள் தேவை

அரசாங்கம் இந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்துவதற்கு இலக்கு வைத்துள்ளதுடன் மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டின் கையிருப்புகளை அதிகரிக்க இலக்கு வைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும், இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். நிதி மற்றும் சட்ட … Read more

கொலை செய்யப்பட்ட 6 மனைவிகள்! நடுக்கடலில் தத்தளித்த ஒற்றை சாட்சி

உலகில் நாள்தோறும் பல்வேறு சம்பங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அவற்றுள் மர்ம சம்பவங்களும் ஏராளம். இவ்வாறான சம்பவங்களின் மர்ம முடிச்சுக்கள் பல ஆண்டுகளாக அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. என்ற போதும் சில குற்றங்களும் இவ்வாறான மர்ம முடிச்சுக்களுள் சிக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. பல குற்றவாளிகள் மர்மம் என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான ஒரு மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு குற்றவாளி அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்தினை இன்றைய நிசப்தம் நிகழ்ச்சியில் பார்க்கலாம், Source link

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, எந்தவொரு நிறுவனத்தினதும் கடன்கள் செலுத்தப்படாத கடன்களாக கழிக்கப்படவில்லை என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கடன்கள், முன்பணம் அல்லது வட்டி செலுத்தாமல், செயல்படாத கடன்கள் (NPLs) என்றும், அவற்றை தரப்பினரிடமிருந்து வசூலிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்தொடர்தல், பேச்சுவார்த்தை, ஏலம் மற்றும் வழக்குகள் மூலம் மீட்பு செயல்முறையை பின்பற்றுவதாகவும் மக்கள் வங்கி சுட்டிக்காட்டுகிறது. 54 … Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்கள் வெளியேறுவது அவசியம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலையினால் மத்திய மலைநாட்டை அண்டிய பிரதேசங்கள் பலவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா, மாத்தளை குருநாகல் மாவட்டங்கள் பலவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலநிலை மற்றும் அனர்த்த நிவாரண … Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களை போதுமான அளவில் கையிருப்பைப் பேணவும்… ஜனாதிபதி பணிப்புரை

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காட்டி சில வர்த்தகர்கள் விலையை அதிகரிக்கச் செய்யும் திட்டமிட்ட முயற்சிகளை இதன் மூலம் தடுக்க முடியும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை காண்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (02) பிற்பகல் கொழும்பு, … Read more