சர்வதேச நாணய நிதியத்திடம் 3 பில்லியன் டொலர் கடன் பெற இலங்கை பேச்சுவார்த்தை – ரெய்ட்டர்ஸ் தகவல்

குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப விவாதம் நடைபெற உள்ளதாக இந்த விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் ரெய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.   ஜூன் மாத இறுதிக்குள் உடன்படிக்கை ஜூன் மாத இறுதிக்குள் … Read more

யோகட் – சீஸ் – திராட்சை – ஆப்பிள் மோட்டார் சைக்கிள்கள் – முச்சக்கர வண்டிகள் – குளிரூட்டிகளுக்கான வரி

2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பொருட்கள் வரிச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ்,நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக நேற்று முதல் (01) பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வியாபாரப் பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யோகட் இறக்குமதி மீது கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 1000 ரூபா விசேட வரி 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான சீஸ்களுக்கும் கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 400 ரூபா … Read more

695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதம் எதிர்வரும் 08ஆம் திகதி

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 8ஆம் திகதி பி.ப 5.30 மணி வரை நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். அத்துடன், 2020ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான … Read more

இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து வெடிபொருட்களை அனுப்பி வைத்த பாக்கிஸ்தான் உளவாளிகள் (Video)

 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜேர்மன் பேக்கரியில் சக்திவாய்ந்த குண்டொன்று வெடித்தது. அந்த குண்டுவெடிப்பில்17 பேர் கொல்லப்பட்டதுடன் 60இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். விசாரணை சிபிஐயிடம் இரண்டு முஸ்லிம் அமைப்புக்கள் அந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தனர். இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த பூனே குண்டுத் தாக்குதல் பற்றி தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை சீபிஐயிடம் ஒப்படைத்திருந்தார் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். ஜேர்மன் பேக்கரியை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை இந்தியா முழுவதும் … Read more

நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க இந்தியக் கடனுதவி , ஏனைய கடனுதவிகளைப் பயன்படுத்தவும்

இந்தியக் கடனுதவி மற்றும் ஏனைய கடனுதவிகளைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் பரிந்துரை வழங்கினார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வரையில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை குறித்தும், அதனை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் (31) கோப் குழுவிற்கு … Read more

இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் கோப் முழு முன்னிலையில்

இலங்கை மின்சார சபை எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 07 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபை, 08 ஆம் திகதி மொறட்டுவைப் பல்கலைக்கழகம் என்பனவும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன. கோப் குழு அதன் தலைவர் பாராளுமன்ற … Read more

இலங்கையில் ரஷ்யா விமானம் ஒன்றை தடுத்து வைக்குமாறு அதிரடி உத்தரவு

ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் 16ம் திகதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கமைய, ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிற்கு செல்லவிருந்த ஏ330 ரக விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைய, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, பிரதிவாதியான … Read more

 கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் அவ்வப்போது மழை அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆகையினால், கடல் பயணங்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு … Read more

புதிய பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி – இராணுவத் தளபதி,ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (02) காலை கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தார். பின்னர், புதிய இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களும் ஜனாதிபதியை சந்தித்தார்.  உரிய பதவிகளில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் முப்படைகளின் தலைவர், ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பது சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு 02.06.2022

அப்பிள் பழத்தின் விலை 200 ரூபா! திராட்சை 1500 ரூபா

இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக, புறக்கோட்டையைச்  சேர்ந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் அப்பிள் பழம் ஒன்று 200 ரூபாவாகவும், ஆரஞ்சு பழம் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ திராட்சைப் பழம் 1500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.   பெறுமதிசேர் வரி அதிகரிப்பு பெறுமதிசேர்  வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரித் திருத்தங்களால் இவ்வாறு  விலைகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.   8 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி நடைமுறைக்கு வந்துள்ளது. … Read more