அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ரி20 அணி

இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போட்டிகள் எதிர்வரும் ஜூன் 07, 08, 11ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதோடு, முதல் இரு போட்டிகள் கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்திலும், மற்றைய போட்டி கண்டி, பல்லேகலை மைதானத்திலும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 14 – 24 வரை 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இடம்பெறவுள்ளது. … Read more

369 பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு

கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த 369 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த 369 பொருட்களை இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் Import Control Licence இன்றி, நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வரிகளுக்கு ஏற்ப இறக்குமதி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் திறந்த கணக்கு கட்டண மாற்றங்களை implementation of open-account payment … Read more

சகல அரச அலுவலகங்களும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்

தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார். வளப்பற்றாக்குறை தற்போதுள்ள வளப்பற்றாக்குறையில் அரச செலவினங்களைக் குறைப்பதற்காகவும் அரச நிறுவனங்களின் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்காகவும் வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே வெள்ளிக்கிழமையன்று மக்கள் அரச அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறு பணிப்பாளர் … Read more

சாதாரண தர மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியரின் பணி இடைநிறுத்தம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவரை பரீட்சை நிலையமொன்றில் வைத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் ஹிதோகம களுவிலசேன பரீட்சை நிலையத்தில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பரீட்சை நிலையத்தின் தலைமை ஆசிரியரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.  

சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த மகிந்த கைது

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் வன்முறைச் சம்பவம் கடந்த ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கைது … Read more

சிகரெட் , மது பானங்களின் விலை அதிகரிப்பு

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாகநேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலை ரூபா 5 ஆல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது இறக்குமதி வரி, பெறுமதி சேர் வரி (VAT)மற்றும் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான சுங்க வரிகளை அதிகரிப்பதற்கான உத்தரவுகளை நிதி அமைச்சகம் நேற்று (1) அறிவித்திருந்தது. இதேவேளை பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுமி ஆயிஷா கொலையாளியின் மற்றுமொரு குற்றச்செயல் அம்பலம்

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், தொடர்பிலும் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் அப்பகுதியிலுள்ள பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக நேற்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் நடத்ததாக பாதிக்கப்பட்ட வெளியிட்ட தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது. மற்றுமொரு துஷ்பிரயோகம் அம்பலம் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் இரகசியமாக சென்ற சந்தேக நபர், அந்த … Read more

வவுனியா சிறுமியின் இறுதி நிமிடங்கள்! பிரேத பரிசோதனை முடிவு வெளியானது – செய்திகளின் தொகுப்பு

வவுனியா – கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் மரணம் நீரில் மூழ்கி மூச்சு திணறலால் ஏற்பட்டது என பிரதே பரிசோதனை முடிவு தெரிவிக்கிறது. கணேசபுரம் பகுதியிலுள்ள பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து கடந்த 30ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் 16 வயதுடைய சிறுமி யதுர்சி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் நிலவியதையடுத்து சிறுமியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சட்ட வைத்திய அதிகாரியினால் சடலம் … Read more

கண்டி மாவட்டத்தில் 52 ஆயிரம் வீட்டுத்தோட்டங்கள் வெற்றி

கண்டி மாவட்டத்தில் உணவுத் தேவைகளுக்காக எழுபத்தைந்தாயிரம் வீட்டுத்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார். இந்த வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட 52 ஆயிரம் வீட்டுத்தோட்டங்கள் வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய மாகாணத்தில் உள்ள உணவுப் பாதுகாப்பிற்கான செயல்திட்டங்கள் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஏனைய வீட்டுத்தோட்டங்களுக்கு விதைகள் மற்றும் நடவுப் பொருட்கள் … Read more