யூரியா வழங்க உலக வங்கி இணக்கம்

எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக்குத் தேவையான யூரியா பசளையை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உணவுப்பற்றாக்குறை நெருக்கடியின் ஆணிவேர் பிரச்சினையான இரசாயனப் பசளை பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். உலக வங்கி இணக்கம் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் அது தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் வேண்டுகோள்கள் ஊடாக விவசாயிகளுக்குத் ​தேவையான பசளையை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார். அதன் … Read more

குரங்கு அம்மை: அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடவும்

மேற்குலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகின்றது. யாழில் இன்னும் குரங்கு அம்மை நோய் பரவியதாக எந்த பதிவும் இடம்பெறவில்லை. ஆனாலும் உங்களது உறவுகள் யாரேனும் ஆபிரிக்க நாடுகளில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ வருகை தரும் போது அவர்களுக்கு காய்ச்சல் அல்லது காய்ச்சலுடன் கூடிய சரும கொப்பளங்கள் மற்றும் ஏதேனும் மாற்றங்களை இனங்கண்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்று யாழ்ப்பாண மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை … Read more

இலங்கையில் பாதுகாப்பு எங்களுக்குத் திருப்தி

இம்மாதம்  7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை சுற்றுப்பயணத்தின் போது,  ஆதரவாளர்கள் தங்கள் அணியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக, இலங்கையின் நிலைமை குறித்து மீளாய்வு செய்வதற்கு பல கூட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரே, போட்டியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். இலங்கையில் அரசியல் ரீதியாக நடக்கும் சில விஷயங்களை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், இது பாகிஸ்தானில் நடப்பதைப் போன்றது. அங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி … Read more

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொழில்நுட்பக் கோளாறு சீரமைப்பு

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொழில்நுட்பக் ​கோளாறு சீரமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 20ம் திகதி தொடக்கம் மூடப்பட்டு இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும் இயந்திரங்கள் நீண்ட நாட்கள் செயற்படாமை காரணமாக அவற்றில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட நேர்ந்தது இதனையடுத்து. கடந்த இரண்டு நாட்களாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழில்நுட்பவியலாளர்கள் தீவிரமான … Read more

திருகோணமலை துறைமுகத்தை ,கைத்தொழில்துறை துறைமுகமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

திருகோணமலை துறைமுகத்தை கைத்தொழில் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கையின் துறைமுக அதிகாரசபையின் தலைவர் பிரசாந்த ஜெயமான தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தில் சுமார் 2400 ஹெக்டேர் உள்ளதாகவும், அதனை தொழில்துறை துறைமுகமாக உருவாக்க சாத்தியமான முதலீட்டாளர்கள் உள்ளார்கள் எனவும், முக்கியமாக உள்ளூர் முதலீட்டாளர்கள் மீது அதிக கவனம் செலுத்துகின்றோம் எனவும் அதிகாரசபையின் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதே நேரத்தில் திரு.ஜெயமான, தனியார் முனையங்களின் தலைவர்கள் மற்றும் இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் … Read more

இலங்கைக்கு டொலர்கள் புதிய முயற்சி

வெளிநாட்டினருக்கு நீண்ட கால விசா வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதனூடாக, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு வழியை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. “கோல்டன் பரடைஸ் விசா’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் ஊடாக விசா வழங்கப்படும். இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை (100000) வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இலங்கையில் வதிவிட விசா … Read more

மோடி வழங்கிய உறுதிமொழி – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யால பருவத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் இன்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்தவுடன் 20 நாட்களுக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உமா ஓயா மற்றும் மொரகஹகந்த திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து மகா … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். உரிய நிவாரணத் தொகையை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திறைசேரிக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். உரிய நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க திறைசேரி செயற்பாடுகள் … Read more

2.2 மில்லியன் அமெரிக் டொலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள்

2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கை சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் எம்.டி அரிபுல் இஸ்லாம் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சுகாதார அமைச்சில் நேற்று (31) இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரினால்  மருந்துப்பொருட்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான 79 அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் … Read more

மீண்டும் தீவிரமடையும் ரஷ்ய – உக்ரைன் போர்க்களம்! அமெரிக்காவின் முடிவு தொடர்பில் பைடன் அறிவிப்பு

உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான மோதல் நிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமான இந்த போர் இதுவரையில் எவ்வித முடிவும் இன்றி தொடர்ந்து வருகின்றது.  இந்த நிலையில், உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளின் கோர தாக்குதல் தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதிகளை … Read more