அட்டுலுகம சிறுமி விவகாரம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பண்டாரகம, அட்டாலுகமவில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் தனிப்பட்ட வாக்குமூலம்  தனிப்பட்ட வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.   Source link

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை! அபாய கட்டத்தில் சிறுவர்கள்

அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு  சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக,  அவர் குறிப்பிட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு  கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்க்கான அறிகுறிகள் காட்டியதாகவும், … Read more

கொழும்பில் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறியளவான மாற்றங்களே பதிவாகி வருகின்றன. செட்டியார் தெருவில் தங்க நிலவரம் இன்றைய தினம் கொழும்பு – செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் இலங்கையில் நேற்று முன் தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 189,700 ரூபாவாகவும், 2224 … Read more

சர்ச்சைக்குள்ளாகும் பொது மன்னிப்பு விவகாரம்! ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப் போகும் குழு

அரசியலமைப்பினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தற்போது காணப்படுகிறது ஆகவே பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேட ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா  தெரிவித்துள்ளார்.   சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். திருத்த யோசனைகள் முன்வைப்பு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நீதியமைச்சரிடம் பல … Read more

சவாலான நிலையை எதிர்நோக்கும் இலங்கை: அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அரச ஊழியர்கள் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன அறிவித்துள்ளார். அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தகவல்  இணையவழி அரச சேவை தற்போதைய … Read more

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை எதிர்கொண்டுள்ள ஆபத்து

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய அளவிற்கு நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமை ஒரு போதும் ஏற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கடன்களை பெறுவதற்கு வேறு நாடு இலங்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உலக வங்கி ஏற்கனவே கூறியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் … Read more

சீனா ,இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் வாழ்வாதார உதவி

சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்க பிரதமர் லீ கெகியாங் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

GCE O/L :அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு சந்தர்ப்பம்

தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் உரிய பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல முடியாவிட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சை எழுதுவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்சமயம் நிலவும் அடைமழையினால் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பரீட்சார்த்திகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்ககப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்சமயம் நிலவும் காலநிலையினால் சாதாரண தரப் … Read more

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம்

இலங்கை ராணுவத்தின் முதற்தர அதிகாரிகள் இராணுவ நிதியில் இருந்து வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் எரிபொருளை வீண்விரயம் செய்வதாக தெரிய வந்துள்ளது. இலங்கைஇராணுவத்தில் முதற்தர அதிகாரிகள் அதாவது லெப்டிணன்ட் கேணல் தரம் தொடக்கம் இராணுவத் தளபதி வரையான பதவிநிலைகளில் தற்போதைக்கு ஆயிரத்து 108 பேர் கடமையாற்றுகின்றனர். கடந்த யுத்த காலம் தொட்டு இராணுவத்தின் முதற்தர பதவி நிலையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மாதாந்த வாடகை சுமார் ஒரு லட்சமாகும். பெரும்பாலான … Read more