எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம்

இலங்கை ராணுவத்தின் முதற்தர அதிகாரிகள் இராணுவ நிதியில் இருந்து வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் எரிபொருளை வீண்விரயம் செய்வதாக தெரிய வந்துள்ளது. இலங்கைஇராணுவத்தில் முதற்தர அதிகாரிகள் அதாவது லெப்டிணன்ட் கேணல் தரம் தொடக்கம் இராணுவத் தளபதி வரையான பதவிநிலைகளில் தற்போதைக்கு ஆயிரத்து 108 பேர் கடமையாற்றுகின்றனர். கடந்த யுத்த காலம் தொட்டு இராணுவத்தின் முதற்தர பதவி நிலையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மாதாந்த வாடகை சுமார் ஒரு லட்சமாகும். பெரும்பாலான … Read more

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா உதவி

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார். அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான  உதவிகளை எடுத்துரைத்தார். கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு … Read more

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, நாளைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளைய தினம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. Source link

கட்சியின் தீர்மானத்தை மீறிய சிரேஷ்ட உறுப்பினர்கள் – மைத்திரி தலைமையிலான கூட்டத்தில் அதிரடி முடிவு

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீரவிற்கு அழைப்பில்லை இதன்போது தற்போதைய அரசியல் … Read more

மே 9 வன்முறை:பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவரிடம் வாக்குமூலம்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்கு எதிரே மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்படி வன்முறையுடன் தொடர்புடைய 16 சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிஷா படுகொலை வழக்கு – சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நாளை (ஜூன் 1ம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ‘கொத்து பாஸ்’ என்ற சந்தேக நபர் இன்று (31) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் ஜெயருவன் திஸாநாயக்க இந்த உத்தரவை … Read more

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்தத எச்சரிக்கை

நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக … Read more

துமிந்த சில்வாவிற்கு கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பை இடை நிறுத்தி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இடைக்கால உத்தரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பின் செயற்பாட்டை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கையின் உயர்நீதிமன்றம் இது தொடர்பில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மரண் தண்டனை தீர்ப்பு 2016, செப்டெம்பர் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் 2021, ஜூன் 24 ஆம் திகதியன்று அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட ஜனாதிபதி மன்னிப்பின் … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடம் மீண்டும் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமைய அந்த சந்தேக நபர்களை மூன்று மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டீ. என். எல். மஹவத்தை நேற்று (30) உத்தரவிட்டுள்ளார். இதன்படி, காத்தான்குடியைச் சேர்ந்த ஆதம் லெப்பை அஹமட் அர்ஹம், முஹம்மட் ரபீக் ரிஸ்பான், முஹம்மது மொஹொமிதீன் முஹம்மது றிஸ்வான், … Read more