வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் மூடப்படும்

மறு அறிவித்தல் வரை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி, 2022 மே மாதம் 30 ஆம் திகதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அன்றைய தினங்களில் அலுவலக நேரம் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை செயற்படும் அத்துடன், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு … Read more

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற மூவர் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்படையின் தலைமன்னார் தம்மென்ன கடற்படை முகாம், கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தங்க நகைகளுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் படி, தலைமன்னார் இருந்து 1.2 கடல் மைல் தொலைவில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள இந்த தங்க நகைகள் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை உபதடுப்பு அலுவலகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.912 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. … Read more

ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை! ஆதங்கம் வெளியிட்டுள்ள பெண்

ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை தான் இருப்பதாக பெண்ணொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் வீட்டுக்கூலி கட்டுவதா? சாப்பிடுவதா? 11ஆம் மாதத்திற்குள் கடும் பஞ்சம் ஏற்படும் என சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? அதிகாலை நான்கு மணிக்கு சென்றோம் மண்ணெண்ணெய் எடுப்பதற்கு. மழைக்கு மத்தியில் வரிசையில் காத்திருந்த போதும் எனினும் மண்ணெண்ணெய் … Read more

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்…

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி அவர்களினால் விக்கும் லியனகே அவர்களிடம் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது. தற்போது இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே அவர்கள், நாளை (ஜூன் 01)  இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம், லுதினன் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார். மாத்தளை விஜய கல்லூரியில் கல்வி … Read more

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தகவல்

தற்போதைய வாழ்க்கை செலவுகளின் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் நாளாந்த வாழ்வை பிரச்சினையின்றி வாழ்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன கூறியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவோ அல்லது தனியார்துறை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கவோ அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளரொருவர் … Read more

கொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு என்ன நடந்தது…. தாய் வெளியிட்ட தகவல்

பண்டாரகம –  அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது.  கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.  கடைக்கு சென்ற சிறுமி மாயம் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால் மகள் கோழி இறைச்சி கறி கேட்டார். அவருக்கு கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பம். நான் வாங்கி … Read more

பொது மக்களுக்கு நிவாரணம்: பிரதமர் ,695 பில்லியன் ரூபா குறை நிரப்புப்பிரேரணையை சபையில் சமர்ப்பிக்க ஏற்பாடு

பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வகையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க 695 பில்லியன் பெறுமதியான குறை நிரப்பு பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கவுள்ளார். சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரண பொதிக்காக இது சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 06. பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பித்தல்   நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள அழுத்தங்களை இயலுமான வரையில் குறைப்பதற்காக … Read more

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க சட்டங்களில் திருத்தம்

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நிதிச் சட்டங்கள் பலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். இதற்கமைவாக 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம், தொலைத்தொடர்பு வரிச்சட்டம், 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டம் முதலான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுகுறித்து திருத்தம் செய்வதற்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி பொருளாதார … Read more

சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு! நேற்று முதல் புதிய நடைமுறை

சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்லும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு தொழிலாற்றும் பொறிமுறையொன்று நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 4.15 வரையில் அலுவலகத்திற்கு பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பணியாளர்கள் வீடுகளில் … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரமாக கொலை

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்ணன், தங்கை பலி அண்ணனும் 32 வயதுடைய ஒருவரும் அவரது … Read more