தற்போதைய நெருக்கடிக்கு அரசு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு

பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு, விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விடுவிக்குமாறு அரச ஊழியர்களிடம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார். “நாங்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர் கொள்கிறோம், நாங்கள் எரிமலையின் உச்சியில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில் இதுவே நாம் எதிர்நோக்கும் உண்மையான நிலைமை எனவும் … Read more

அரிசி ஒரு கிலோ ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கலாம்! வெளியானது செய்தி

எதிர்வரும் காலத்தில்  நாட்டில் அரிசி ஒரு கிலோ கிராம் 1000 ரூபாவைத் தாண்டும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஒக்டோபர் மாதத்திற்குள் நாடு கடுமையான அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதன் காரணமாக அரிசியின் விலை ஆயிரம் ரூபாவை தாண்டும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  உடனடி நடவடிக்கை இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி பயிர்ச்செய்கைகளுக்கு உடனடியாக உரங்களை வழங்குமாறும் சங்கம் கேட்டுக்கொள்கின்றது. கூடிய விரைவில் மாற்று உணவுப் பயிர்களை … Read more

9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை: 12 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம்

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் 12 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையங்கள், புலனாய்வு பிரிவுகள் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவினரின் கூட்டு முயற்சியின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த மே மாதம் 9ஆம் திகதி … Read more

இலங்கையில் உருவாகப் போகும் பாண் வரிசை

எதிர்வரும் நாட்களில் நாட்டில் பாண் வரிசை ஏற்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கைக விடுத்துள்ளது.  தற்போதைய நெருக்கடியில், எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மா பற்றாக்குறையால்  2000இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.  ஏற்படப் போகும் ஆபத்து மேலும், இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பேக்கரிகளுக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்காலத்தில் பேக்கரி தயாரிப்புக்களை வாங்குவதற்கு  நீண்ட வரிசைகள் நாட்டில் ஏற்படலாம் என அவர் எச்சரிக்கை … Read more

முத்துக்கள் இங்கினியாகல பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன

அம்பாறை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றில், பாரியளவிலான (76) யானை முத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன . கடந்த திங்கட்கிழமை (28) அம்பாறை முகாமில் உள்ள பொலிஸ் விஷேட அதிரடிப் படை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விஷேட அதிரடிப் படை (STF) கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தரவின் கட்டளை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக, தலைமை பொலிஸ் பரிசோதகர் எச். எம். ஏ. மனோகர உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த தேடுதல் … Read more

முடியுமான அனைத்து பகுதிகளிலும் பயிரிடவும் – அரச ஊழியர்களுக்கு விவசாய அமைச்சர் அறிவுறுத்தல்

முடியுமான அனைத்து பகுதிகளிலும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர் நோக்கவுள்ள உணவு நெருக்கடிக்கு முகம்கொடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிகையில்.. “எங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மட்டுமே வரவிருக்கும் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, இந்நாட்டில்  பயிரிட முடியுமான அனைத்து இடங்களிலும் எதையேனும் பயிரிடும் பணியை அணுகுவதன் முக்கியத்துவத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  இருக்கும் காணிகளில் … Read more

சிறுமி ஆயிஷாவை கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்

பண்டாரகம – அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார். ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் தந்தையும் ஐஸ் போதைப்பொருள் பாவைனயாளர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதாக தெரியவந்துள்ளது. அட்டுலுகம சிறுமி விவகாரம்! குற்றத்தை ஒப்புகொண்ட நபர் : … Read more

உணவு பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்… அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளிடமும் ஜனாதிபதி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். இன்று (30) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் … Read more

நீரேந்து பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது. 155 அடி உயரம் கொண்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் 113.57 அடியாகவும் (73.27%),,120 அடி கொண்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 43. 29 அடியாகவும் (36.8%) காணப்படுவதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்து லக்சபான, புதிய லக்சபான, விமல சுரேந்திர, மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர் மின் … Read more

இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை: உலக வங்கி

உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. “அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது. உலக வங்கியின் நிலைப்பாடு எனினும் இது தொடர்பில் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். “உலக வங்கி இலங்கைக்கு அவசரகால கடன் அல்லது புதிய கடன்களை வழங்கி ஆதரவளிக்க … Read more