மகிந்த தாக்கியதாக பகிரப்படும் செய்தி: குமார் சங்கக்கார வெளியிட்டுள்ள உண்மைத் தகவல்

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்தி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உண்மைத் தகவலை வெளியிட்டுள்ளார்.  பகிரப்படும் செய்தி குமார் சங்கக்காரவை மகிந்த ராஜபக்‌ச தாக்கியுள்ளதாக செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையிலேயே குமார் சங்கக்கார கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டுவிட்டர் பதிவு இதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், குறித்த செய்தி அடிப்படை … Read more

13ம் திருத்தச் சட்டம் இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது! மகாநாயக்கர்கள் – செய்திகளின் தொகுப்பு (Video)

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என்று மகாநாயக்கர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச நேற்று கண்டியில் அஸ்கிரி – மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி தொடர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் 13ம் திருத்தச் சட்டம் இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதைத்தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே சாத்தியப்படும் என மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பான விரிவான … Read more

அட்டுலுகம சிறுமி விவகாரம்! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்

நாட்டையே உலுக்கிய அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள 9 வயது ஆயிஷாவின் கொலை சம்பவம் தொடர்பில், சிறுமியுடைய வீட்டிற்கு அடிக்கடி வருகை தந்த அயலவர்  ஒருவர் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 28 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், குறித்த நபர் சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு  வந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  குறித்த நபர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருகை தருவதாகவும் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் உலக வங்கியிடம் உதவி கோரல்  

கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து நீண்டகால உதவிகள் கிடைக்கும் வரை உலக வங்கியிடம் அமைச்சர் பீரிஸ் உதவி கோரினார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாதீட்டு பற்றாக்குறையைக் குறைப்பதில் உள்ள சவால்களின் தீவிரமான தன்மையை … Read more

எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வை சந்திக்கப் போகும் இலங்கை மக்கள்

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது, எதிர்காலத்தில் இவற்றின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கான மரக்கறி விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.  பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் வரவு சுமார் 75 சதவீதமாக குறைவடைந்திருந்ததாகவும், கொள்வனவு செய்ய வருபவர்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட  குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வு  தற்போது … Read more

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களிலும் அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

கடற்பகுதிகளில் பலமான காற்று, கொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 மே 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு … Read more

இலங்கையில் பட்டினி பேரவலம் ஏற்படும் ஆபத்து

நாட்டில் தற்போதுள்ள நிலையில் உணவுக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளிடம்,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த போகத்தில் 55 சதவீத நெற்பயிர்களே அறுவடை செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். கடும் உணவு நெருக்கடியை சந்தித்து வருகிறோம். நாங்கள் எரிமலையின் மீது இருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஒரு மரவள்ளி குச்சியைக் கூட தூக்கி … Read more

அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்: வெகுவிரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்கள் 5 நாட்களும் பணிக்கு சமூகமளிப்பது அவசிமற்றதென வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள், இச்சவாலை வெற்றிக்கொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்டபிட்டுள்ளார். விவசாயத்துறை பாதிப்பு அவற்றை விரைவாக செயற்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு காரணிகளினால் தேசிய விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. அரச காரியாலயங்களை சூழவுள்ள காணிகளில் மேலதிக பயிர்ச்செய்கையில் ஈடுப்படுமாறு சகல அரச ஊழியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பயன்படுத்தப்படாத நிலையில் … Read more

இலங்கையின் மருந்து தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் கரிசனை

இலங்கையின் மருந்துத் தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் விசேட கரிசனை செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக பேணிக் கொள்ளல், அதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான வழிமுறை குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலையீட்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார சம்மேளனத்தின் கூட்டத்தின் இடையே இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன மற்றும் … Read more