கோட்டா விலகினால் பசில் ராஜபக்ச ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவார்:விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், ஜனாதிபதியாக பசில் ராஜபக்சவே அடுத்து பதவிக்கு வருவார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை அவர் வழிநடத்தி வருவதே இதற்கு காரணம் எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி குடும்பத்தினரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் இதற்கு முன்னர் மாநாயக்கர் தேரர்களிடம் பேசிய விஜயதாச ராஜபக்ச, “ஒரு குடும்பம் … Read more

ரஷ்ய இராணுவத்திற்கு மூன்று டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்த ரஷ்ய-இந்திய நட்புறவு சங்கம்

ரஷ்யா-இந்தியா நட்புறவு சங்கமான ‘திஷா’, மூன்று டன் அளவு பொருட்களை மனிதாபிமான உதவியாக ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ரஷ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பட்ட மருந்து பொருட்கள் மனிதாபிமான உதவியாக மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், குர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆயுதப்படைகளின் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இந்திய மருந்து நிறுவனமான பன்பியோ பார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அடங்கும். ரஷ்ய … Read more

பண்டாரகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்

பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கருத்து தெரிவித்துள்ளார். சிறுமி ஆயிஷா பாத்திமாவின் மரணம் தொடர்பான சந்தேகத்தின் கீழ் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிக்கை உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், கோவிட் பரிசோதனை முடிவுகளுக்காகவும் காத்திருப்பதாக அவர் கூறினார். குற்றப்புலனாய்வு துறைக்கு … Read more

பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பாராளுமன்றம் செயற்படவில்லை என்பது இன்றைய பிரதான குற்றச்சாட்டு – பிரதமர்

“இன்று எமது நாட்டில் பிரதான பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுப்படுத்தப்படவில்லை இதேபோன்று அரசியல் துறையிலும் இரண்டு முக்கியப் பிரச்சினைகள் உண்டு. 19ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது ஒரு பிரச்சினை. இது குறித்து கட்சித் தலைவர்கள் என்ற ரீதியில் நாங்கள் 21ஆவது திருத்தத்தை இப்போது தயாரித்து வருகிறோம் “என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “இரண்டாவது விடயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக செயற்படுவது. கட்சித் தலைவர்கள் இதற்கான காலத்தையும்  வழிமுறையையும் தீர்மானிக்க வேண்டும். இதுதவிர, … Read more

உற்சாகத்தில் கோட்டாபய! பின்வாசல் வழியாக நுழையும் செனரத் – எச்சரிக்கும் ரணில்

ஜனாதிபதி மாளிகையில் உற்சாகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த வாரம், ஜனாதிபதி மாளிகையில் தமது தற்காலிக அலுவலகத்தில் பணிபுரியும் உற்சாகமான மனநிலையில் இருந்ததாக வாராந்த செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருப்பதால், தமக்கு எதிரான கவனம் திசைமாறியுள்ளது என்று எண்ணமாக இது இருக்கலாம் என்று அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. கோட்டாபய பணிபுரியும் அலுவலகத்தில் அவருடைய தனிப்பட்ட பணியாளர்கள் மாத்திரமே செயற்படுகின்றனர். பின் வாசல் வழியாக நுழையும் செயலாளர் ஜனாாதிபதியின் மாளிகையை ஆர்ப்பாட்டக்கார்கள் … Read more

சிறுமி துஸ்பிரயோகத்திற்குள்ளான விவகாரம்! பூசகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சிறுமியைக் காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோயில் பூசகரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்குப் பிணை வழங்கியும் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை – பெரிய நீலாவணை பகுதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியின் தந்தை கடந்த 26.05.2022 அன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய கல்முனை – சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான … Read more

முட்டையின் விலை 50! கோழியின் விலையும் உயர்கிறது

எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அஜித் குணசேகர இதனை குறிப்பிட்டார்.  டொலர்கள் இல்லை தனது தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, உரம் கிடைக்காமல் தவிக்கும் … Read more

பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் – உலக உணவு – விவசாய அமைப்பு

இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கமைவாக பயறுச் செய்கையில் ஈடுபடும் ஒரு குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான விம்லெம்ரா செரன் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறுபோகத்தில் வேளாண்மைச்; செய்கை மேற்கொள்ளாத காணிகளில் பயறுச் செய்கையை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார். … Read more