வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அமெரிக்கத் தூதுவர் சுங்குடன் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை 2022 மே 27, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இருதரப்பு உறவுகள், தற்போதைய உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களைத் தணிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் உதவி ஆகியன குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கும், தெளிவான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்வதில் அரசாங்கம் … Read more

பொருளாதார நெருக்கடியின் எதிரொலி! யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு ஏற்பட்ட நிலை

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த விமான நிலையம் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது. வட பகுதியில் உள்ள மக்கள் குறைந்த நேரத்தில் குறைந்த செலவுடன் தென்பகுதிக்கு வந்து செல்வதற்கும் தென்னிந்தியாவிற்கு சென்று வருவதை நோக்கமாக கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

உலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  டொரின் பெறுமதி அதிகரிப்பு அதற்கமைய, வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,853 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதென உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது வாரமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நிலையான பெறுமதியில் இலங்கை ரூபா  இதேவேளை ரூபாவின் பெறுமதியை கடந்த இரண்டு வாரங்களாக நிலையானதாக … Read more

எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் குறித்து அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க செயலி மூலம் எரிபொருள் சேகரிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் (27) மாத்திரம் பல தடவைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்த 1200 இற்கும் அதிகமானவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் … Read more

9ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறை: மற்றுமொரு அடையாள அணிவகுப்பு

கடந்த மே மாதம் 9ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் குறித்த விசாரணைக்காக மற்றுமொரு அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த வழக்கிற்கு சட்ட மா அதிபரின் நேரடி கண்காணிப்பு இடம்பெறுகிறது. வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு விரைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 2 … Read more

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலீடாக இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதில் குறிப்பாக அரசாங்கத்தின் மூலதன செலவுகள் வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் செலவு குறைப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் … Read more

21ஆவது அரசியல் யாப்பு திருத்தம் ஒரு நபரை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படவில்லை

அரசியல் அமைப்பில் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார் பார்ப்பாகும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார். 20ஆவது யாப்பு திருத்தத்திலுள்ள குறைகளை சரி செய்து 21ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அரசியல் யாப்பு தொடர்பில் பல ஜனாதிபதிகளின் கீழ், அடிக்கடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.. சில சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் யாப்பை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 21ஆவது அரசியல் … Read more

ரணிலின் அங்கீகாரத்தை தந்திரமாக பயன்படுத்தும் ராஜபக்சக்கள் – பேராசிரியர் சரத் விஜேசூரிய தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு தொல்லையெனவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாபம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க பெரும் இராஜதந்திர … Read more

ருவன்வெலி சேயாவில் இடம்பெற்ற மாபெரும் கொள்ளை! பின்னணியில் இருக்கும் சக்தி வாய்ந்த நபர்கள்

அநுராதபுரத்தில் அமைந்துள்ள புனித ருவன்வெலி சேயாவிலுள்ள சுடா மாணிக்கம் அகற்றப்பட்டு அதன் மீது கண்ணாடி கல் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிவாரத்தில் இருந்த சுமார் 15 பில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலாநிதி அனுஜா ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல சக்திவாய்ந்த நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் … Read more

மத்திய வங்கிக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

மத்திய வங்கியின் கடமைகள் சுதந்திரமாக நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்கம் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி வழங்கியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதிக்குழுவின் உறுப்பினர் சஞ்ஜீவ ஜயவர்தன உள்ளிட்டோருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி செயல்முறைகள் பற்றிய விளக்கத்தையும் ஜனாதிபதி … Read more