ருவன்வெலி சேயாவில் இடம்பெற்ற மாபெரும் கொள்ளை! பின்னணியில் இருக்கும் சக்தி வாய்ந்த நபர்கள்

அநுராதபுரத்தில் அமைந்துள்ள புனித ருவன்வெலி சேயாவிலுள்ள சுடா மாணிக்கம் அகற்றப்பட்டு அதன் மீது கண்ணாடி கல் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிவாரத்தில் இருந்த சுமார் 15 பில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலாநிதி அனுஜா ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல சக்திவாய்ந்த நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் … Read more

மத்திய வங்கிக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

மத்திய வங்கியின் கடமைகள் சுதந்திரமாக நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்கம் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி வழங்கியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதிக்குழுவின் உறுப்பினர் சஞ்ஜீவ ஜயவர்தன உள்ளிட்டோருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி செயல்முறைகள் பற்றிய விளக்கத்தையும் ஜனாதிபதி … Read more

சனிபகவானால் இரண்டு நாளில் அடிக்கும் அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் 12 ராசிகள்

சூரிய பகவானின் மகன் சனி பகவான், வைகாசி மாத அமாவாசை நாளில் பிறந்தார். சனி பகவான் பிறந்த நாள், சனி ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். சனி ஜெயந்தி இந்த ஆண்டு மே 30 அன்று கொண்டாடப்படுகிறது. நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி பகவான், புண்ணியத்திற்கு பலன் கொடுப்பார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை சனி ஜெயந்தியன்று சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்திற்கு வந்திருக்கிறார் என்பது இந்த ஆண்டு சனி ஜெயந்தியின் கூடுதல் சிறப்பு. சனி பகவானின் … Read more

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. கடந்த மாதம் ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 107 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அது தற்போது 120 டொலர்களாக உயர்ந்துள்ளது.  இதனால் இலங்கையிலும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் கப்பல் கட்டணங்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கையில் எரிபொருள் விலை அண்மைக்காலங்களில் அடிக்கடி அதிகரிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Source link

ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! சம்பிக ரணவக

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் விடயங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாட்டலி சம்பிக ரணவக வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், 43ம் படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக ரணவக தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இதற்கு முன்னரும் 2001ம் ஆண்டுகளில் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது ரணில் விக்ரமசிங்கவினால் அதனை வெற்றி கொள்ள முடிந்தது.  இம்முறையும் அவர் அதனை … Read more

2022 IPL கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி நாளை

இந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. அஹமதாபாத் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இதேவேளை ,ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது  

இலங்கையை விட்டு வெளியேறக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர்

நாட்டின் தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு நிகரான 2500 டோக்கன்கள் நேற்று வழங்கப்பட்டன. கடவுச்சீட்டு பெறுவதற்காக சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் கடவுச்சீட்டு பெறுவதற்கு தினமும் சுமார் 2500 பேர் வரவழைக்கப்படுகின்றனர். சனக்கூட்டம் காரணமாக திணைக்கள வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியில் தங்கியிருந்த மக்களுக்கும் திணைக்களத்தின் பாதுகாப்புக்காகச் செயற்படும் … Read more

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்து விசாரணை

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போன நிலையில் உயிரிழந்த 9 வயது சிறுமியின் மரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சிறுமியின் மரணம் கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,சம்பவம் தொடர்பில் இதுவரை இருபது பேரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டதாக அவர் கூறினார். சிறுமி நேற்று காலை … Read more

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட மனிதாபிமான உதவிப்பொருட்கள் நுவரெலியா மக்களுக்கு விநியோகம்

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று (28) நுவரெலிய மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு ,நுவரெலிய மாவட்ட செயலாளர திரு.நந்தன கலபட தலைமையில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட மனிதாபிமான உதவிகளின் முதல் தொகுதி நானுஓயா புகையிரத நிலையத்தில் மாவட்ட செயலாளரினால் பொறுப்பேற்கப்பட்டது. நுவரெலியா பிரதேச செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனிகளுக்கு உட்பட்ட வறிய மக்களுக்கு வழங்குவதற்காக தோட்ட நிருவாங்களிடம் கையளிக்கப்ட்டன. … Read more

தென்னிலங்கை போராட்டக் களத்தில் நிர்வாணமாக்கப்பட்ட நபர்கள்! வெளிவரும் பல உண்மைகள் (Video)

கடந்த இரண்டரை வருடக் காலத்தில் ராஜபக்ச அரசாங்கம், அல்லது இணைந்த அரசாங்கத்தின் மூலம் இந்த நாடு எந்தளவு சீரழிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே என கொழும்பில் இருக்கும் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான வி.தேவராஜ் தெரிவித்துள்ளார். உண்மையில் இதில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பித்தது. இதன் விளைவாகத்தான் காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, காலி முகத்திடலில் கோட்டா கோ கம என்ற ஒரு இடத்தையும் உருவாக்கினர் என குறிப்பிட்டுள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே … Read more