தென்னிலங்கை போராட்டக் களத்தில் நிர்வாணமாக்கப்பட்ட நபர்கள்! வெளிவரும் பல உண்மைகள் (Video)

கடந்த இரண்டரை வருடக் காலத்தில் ராஜபக்ச அரசாங்கம், அல்லது இணைந்த அரசாங்கத்தின் மூலம் இந்த நாடு எந்தளவு சீரழிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே என கொழும்பில் இருக்கும் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான வி.தேவராஜ் தெரிவித்துள்ளார். உண்மையில் இதில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பித்தது. இதன் விளைவாகத்தான் காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, காலி முகத்திடலில் கோட்டா கோ கம என்ற ஒரு இடத்தையும் உருவாக்கினர் என குறிப்பிட்டுள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே … Read more

இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – அமெரிக்கா வெளியிட்டுள்ள நம்பிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பாரிய பின்னடைவை கண்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் சாதகமான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் என மேற்குலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன. ரணில் மீதான  அமெரிக்காவின் நம்பிக்கை இவ்வாறான நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மையை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவினால் ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியையும் முடிவுக்கு கொண்டு வருவார். இலங்கை மக்கள் விரும்பும் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என … Read more

காணாமல் போன அட்டலுகம சிறுமி சடலமாக மீட்பு (Photo)

காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  பண்டாரகம – அட்டலுகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் குறித்த சிறுமி காணாமல்  போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இந்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சேற்றுக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அட்டலுகம,  பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான சிறுமி பாத்திமா ஆயிஷா நேற்று வீட்டுக்கு அருகில் இருக்கும் கோழிக்கடைக்குச் சென்று திரும்பும் வழியில் காணாமல் … Read more

அதிகரிக்கும் அரச சேவையின் செலவினங்கள்! மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்ட செயற்பாடு

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றது.  அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் இது தொடர்பான தீர்மானம் தொடர்பில் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுச் சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் நிதி அமைச்சின் செயலாளரினால் அரச சேவையின் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொதுமக்களின் பணத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, … Read more

மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிக்க பாராளுமன்றப் பேரவை இணக்கம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிப்பதற்கு பாராளுமன்றப் பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (26) நடைபெற்ற பாராளுமன்றப் பேரவைக் கூட்டத்திலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ, கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், தரணி ஷிரந்தா … Read more

கொழும்பில் இன்று பாரிய கறுப்புப் பேரணி

ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய கறுப்பு உடைப் பேரணியொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோ கம” போராட்டத்துக்கு இன்றுடன் 50 நாட்கள் பூர்த்தியாகின்றது. அதனை முன்னிட்டு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் பேரணி, ஜனாதிபதி செயலகம் வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வருகை தரும் … Read more

இந்திய அன்பளிப்பு உணவுப் பொருட்கள்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணி ஆரம்பம்

இந்திய மக்கள் அன்பளிப்புச் செய்த பொருட்களை இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக உணவு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாவட்டச் செயலகங்கள் ஊடாக அரிசி, பால்மா என்பன பகிர்ந்தளிக்கப்படும். இரண்டு பில்லியன் இந்திய ரூபா பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். இதேவேளை, இந்தியா அன்பளிப்புச் செய்த 260 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் ஏனைய … Read more

இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிகாரிகளுக்கான விருந்தகம் இராணுவ தளபதியினால் திறப்பு

பனாகொடவில் அமைந்துள்ள இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையக அதிகாரிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிகட்டிடமான “Cyllenes Cave” விருந்தகத்தை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று (26) மாலை திறந்து வைத்தார். இலங்கை சிங்கப் படையணியின் நீண்டகால தேவைப்பாடுகளில் ஒன்றாக காணப்பட்ட புதிய கட்டிட தொகுதியில் தொலைக்காட்சி அறை, விருந்தினர்களின் வரவேற்பு அறை, பில்லியர்ட்ஸ் விளையாட்டிற்கான அறை, பொழுதுபோக்கு அறை, ஆகிய வசதிகளை உள்ளடக்கியதாகவும் சமிக்ஞை படையணி அதிகாரிகளின் தொழில்தரத்தை … Read more

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள் – சினிமா பாணியில் பாரிய கொள்ளை

தென்னிலங்கையில் வெளிநாட்டவர்கள் இருவர், சினிமா பாணியில் மேற்கொள்ள பாரிய கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலி, களுவெல்ல பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு தங்க பொருட்களை கொள்வனவு செய்வதாக கூறி வந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் பாரிய கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த இருவரும் சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 28 தங்க நகைகளை மோசடியான முறையில் திருடிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். சினிமா பாணியில் கொள்ளை வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் கடந்த 24ஆம் … Read more

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நேற்று (27) பாராளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். அதேபோன்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஊடாக இரு … Read more