இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நேற்று (27) பாராளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். அதேபோன்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஊடாக இரு … Read more

இந்திய உதவித்திட்ட பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் விநியோகம்

‘அன்புடனும் அக்கறையுடனும் இந்தியாவிடமிருந்து வடக்கு மாகாண மக்களுக்கான அட்சய பாத்திர உதவிகள்’ கீழான நன்கொடை உதவித்திட்ட பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் விநியோகிக்கும் பணி நேற்று (27) மாலை ஆரம்பமானது. இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 15, 857 குடும்பங்களுக்கு அரிசியும் மற்றும் 3, 964 குடும்பங்களுக்கு பால்மா பைக்கட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற … Read more

ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக 83,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி  அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன் உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 23,000 மில்லியன் உண்டியல்களும், 364 நாட்களில் முதிர்வடையும் 20,000 மில்லியன் உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்பப்படவுள்ளன. விலைக்குறிப்பீடுகள் கோரப்படுகின்றன அரசாங்கப் பிணையங்களில் உள்ள முதனிலை வணிகர்களிடம் இருந்து விலைக்குறிப்பீடுகள் கோரப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட இலத்திரனியல் விலைக்குறிப்பீட்டு வசதியூடாக மட்டுமே … Read more

சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதை விரைவுபடுத்தவும் – கோபா குழு வலியுறுத்து  

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மாகாண சபைகளுக்கு நிதி வழங்குகையில் எவ்வித பாகுபாடுமின்றி நிதி வழங்குவதற்கு அமைச்சு தலையிட வேண்டும் என்றும் கோபா குழு அண்மையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய கொள்கையைத் தயாரிக்கையில் … Read more

மனைப்பொருளாதார உற்பத்தி தொடர்பான பயிற்சி

கம்பஹா மாவட்டம், மீரிகம பிரதேசத்திலுள்ள அரச ஊழியர்களுக்கு அம்பேபுஸ்ஸ – மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் மூலம் மனைப்பொருளாதார உற்பத்தி தொடர்பான பயிற்சி எதிர்வரும் புதன்கிழமை (01) காலை 09.00 மணி முதல் மாலை 03.30 வரை மீரிகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கலந்துகொள்ள விரும்பும் அரச ஊழியர்கள் அம்பேபுஸ்ஸ – மாவட்ட விவசாய பயிற்சி நிலைய உதவிப்பணிப்பாளரை அல்லது விவசாயப்பண்ணை முகாமையாளரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு! மற்றுமொரு தகவல் (Video)

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை பிரதமர் எடுத்ததாகவும் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவு செலவுத்  திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம் சுகாதாரம் மற்றம் கல்வியைத் தவிர அனைத்து அமைச்சுக்களுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு மேலும் … Read more

கொழும்பு கோட்டை நீதவான் ,காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது விதித்துள்ள தடை

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு இன்றுடன் 50 தினங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணி, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் சில வீதிகளில் பயணிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று (27) முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கொழும்பு என்.ஏ.எஸ். சுற்றுவட்டத்தில் இருந்து சைத்திய வீதி வரையான பகுதி, என்.ஏ.எஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ஜனாதிபதி மாவத்தை வரை, செரமிக் சந்தியிலிருந்து … Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இயற்கை வளங்கள் துறையின் பேராசிரியர் மெத்திகா விதானகே தற்போது தனது பணியிடத்திற்கு துவிச்சக்கர வண்டியில் செல்வதனை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். தனது உடல்நிலையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்நோக்கும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் மாற்றாகவும் தான் சைக்கிளை தெரிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். துவிச்சக்கர வண்டி பயன்பாடு கடும் எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட வரிசை, கட்டுப்பாடற்ற எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் சோர்வடைந்த பலர் தற்போது துவிச்சக்கர வண்டியின் பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களில் வல்லுநர்கள், பேராசிரியர்கள் … Read more

உதிரி பாகங்களின் விலை சடுதியாக உயர்வு – மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு

டயர், டியூப் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது அண்மையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் அது போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி பேருந்துக் … Read more