பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல பிரஜையை உருவாக்குவதே கல்வி சீர்திருத்த செயல்முறையின் விளைவாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கல்வி அதிகாரிகளிடம் தெரிவிப்பு

கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு, பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் முன்னுரிமை வழங்கப்படவேண்டியவைகள் மற்றும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்று (27) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். நீண்ட காலமாக நாடு எதிர்நோக்கும் முக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய கல்விக் கொள்கை … Read more

அடுத்த பிரதமர் மைத்திரி தான்! ரணில் ஜனாதிபதியாக பதவியேற்பார்: காரணத்தை கூறும் முக்கியஸ்தர்

எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தி அல்ல. அதில் ஒரு கூட்டணி கட்சி மட்டுமே. சஜித் பிரேமதாச எனது தலைவர் அல்ல. கூட்டணியின் தலைவர் அவ்வளவுதான். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அரசியல் தலைவர்கள் மற்றும் தற்போதைய இலங்கை அரசியல் களம் தொடர்பில் விரிவாக கருத்துரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரபலமான தலைவர்களுக்கு அருகில் … Read more

இலங்கை மக்களுக்கான மனிதாபிமான உதவிகள்

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒருதொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்களை பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் அவர்கள், சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களிடம் 2022 மே 27 ஆம் திகதி கொழும்பில் கையளித்தார்.  25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய இத்தொகுதியானது கிட்டத்தட்ட 260 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடையதென மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஜானக சந்த்ரகுப்தா அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.  2.    இம்மனிதாபிமான உதவிப்பொருட்களை … Read more

எரிபொருள் வரிசையில் பெண்ணிடம் கைவரிசையை காட்டிய நபர்கள்! இலட்சக்கணக்கில் இழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ளது.   தம்புள்ளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர். தங்க நகையின் பெறுமதி இலட்சக்கணக்கில்  குறித்த சம்பவம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளையைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவர் இதுகுறித்து  பொலிஸில் முறைப்பாடு … Read more

வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் தகவல்களை உடனடியாக பரிமாற்றிக் கொள்ளக்கூடிய செயலி

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களைக் கண்காணித்து,அதுதொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் உடனடியாக பரிமாறிக் கொள்ளக்கூடிய செயலி (App) தற்போது நாட்டில் பல இடங்களில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பப் பிரிவினால் இந்த செயலி (App) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வரும் வாடிக்கையாளர்களின் வாகனத்தின் இலக்கத்தகடு குறித்த விபரமும் … Read more

இலங்கையில் என்ன நடக்கிறது….. வெளிநாட்டு மக்களிடம் ஜேர்மன் தம்பதியினர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வன்முறைகள் வெடிப்பதாக வெளிவரும் செய்திகளினால் சுற்றுலா பயணிகள் இலங்கை செல்வதனை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஜேர்மன் தம்பதியினர் தற்போதைய நிலைமை தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலை அந்த காணொளியில் தாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்ததாகவும் இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். “நாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தோம். நாங்கள் முதலில் கண்டியில் இருந்து பயணத்தை … Read more

உக்ரைனுடைய ஒவ்வொரு அடிக்கும் தவறாமல் திருப்பி அடிக்கும் ரஷ்யா… இதை கவனித்தீர்களா?

முன்பு மரியூபோல் நகரை ரஷ்யா பிடிக்கத் திட்டமிட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்தனர் உக்ரைன் வீரர்கள். ஆனால், விடாமல் தாக்கி, பலரைப் படுகொலை செய்து, எஞ்சியிருந்தவர்களையும் மீட்பதுபோல் மீட்டு… இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! மரியூபோலை இப்போது பார்த்தால், சூறாவளி வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்ற ஒரு ஊரைப்போல இருக்கிறது. அதேபோல, சில நாட்களுக்கு முன், புடின் ஆதரவு ஊடகவியலாளர் ஒருவர், ரஷ்யாவுக்குச் சொந்தமான ஒரு அதிநவீனப் போர் வாகனத்தைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருந்தார். டான்பாஸ் … Read more

சில விடயங்களுக்கு தீர்வு இன்றி கூட்ட அறிக்கையாக தொடருகிறது – முல்லைத்தீவு அரசாங்க அதிபர்

முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று (27) காலை மாவட்ட செயலக பேரவை மாநாட்டு மண்டபத்தில் செயலி ஊடாக இடம்பெற்றது. கணக்காய்வு முகாமைத்துவ குழு அமைப்பாளரும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளருமான கே.லிங்ககேஸ்வரனின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டத்தின் பல விடயங்கள் நிறைவேற்றப்பட்டாலும் சில விடயங்கள் தீர்வு காணப்படாது தொடர்ச்சித்தன்மையுடன் கூட்ட அறிக்கைகளில் வருவதாக மாவட்ட … Read more

தேவையான உணவுப் பயிர்களை தாமே உற்பத்தி செய்ய வசதி

பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு விவசாயத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும் என்றும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.