தேவையான உணவுப் பயிர்களை தாமே உற்பத்தி செய்ய வசதி

பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு விவசாயத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும் என்றும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு

இலங்கையில் பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட தூதுவர் கட்சுகி கோட்டாராவிடம் தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று காலை இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட தூதுவர் கட்சுகி கோட்டாரா உள்ளிட்ட ஜப்பானிய மூத்த … Read more

பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மது கனி பொலிஸாரை கேட்டுக்கொண்டார். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் ,  மக்களுக்கு அரசின் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் இலகுவான முறையில் அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு பெற்று கொடுப்பது தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலக மண்டப கேட்போர் கூடத்தில் இன்று (27) நடந்த கூடத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். எரிபொருள் மற்றும் அத்தியவசிய தேவைகளை … Read more

இலங்கை அணி  வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி   10 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 506 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி போட்டியின் இறுதி நாளான இன்று (27)  அனைத்து விக்கெட்களையும் இழந்து … Read more

இன்று பதிவான டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி  364 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளது.  அதேசமயம், டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 27 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியின் தகவலின் படி இன்றைய தினம் யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 392 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி  381 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.  பவுண்ட் ஒன்றின் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஹல்டன்

இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 26ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மற்றும் உயர்ஸ்தானிகர் ஹல்டன் ஆகியோர் இருதரப்பு ஈடுபாடுகள், உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் சர்வதேச சமூகத்தின் உதவிகள் குறித்து கலந்துரையாடினர். பல பொருளாதார … Read more

சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பல மாவட்டங்களில் தாமதம்

பல மாவட்டங்களில் சிறு போகத்திற்கான விதைப்பு மற்றும் நிலத்தை தயார்படுத்தும் பணிகள் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சிறு போகத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நிறைவடையாவிட்டால், நாடு கடும் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி அபேசிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் நெற் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாவிட்டால், அதற்கு பதிலாக வேறு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் – மாறாத சிந்தனை

Courtesy: ஜெரா ஈழத் தமிழர்களுடைய வரலாற்றின் அத்தனை பக்கங்களுமே இரத்தத்தால் எழுதப்பட்டவை. அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே, யூன், யூலை போன்ற மாதங்களைக் கறுப்பு மாதங்களாக பிரகடனப்படுத்துகின்ற அளவிற்குக் கறைபடிந்தவை.  கிள்ளுக்கீரையாக்கப்படும் தமிழர்கள்  காலனியாதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்கள் கிள்ளுக்கீரையாகவே பார்க்கப்பட்டிருக்கிறார்கள். பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சிங்கள பெரும்பான்மை தலைமைகள் தமிழர் தரப்பை தம்முடைய சுயலாபத்திற்கும் தேவைகளுக்கும் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு மட்டும் விரும்பினார்களே தவிர, தமிழர்களின் சுதேசிய மரபைகளையும், உரிமைகளையும் மதித்து நடக்க … Read more

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பா தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்ளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 118, 119 மற்றும் 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறு சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து வீடுகளில் சேமித்து வைப்பது ஆபத்தானது. இதனால்;, சிறு தவரொன்று ஏற்பட்டால் கூட அதனை வைத்திருப்பவருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் … Read more

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான உண்மைத் தகவல்! பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பள உயர்வு குறித்து … Read more