இலங்கை வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக வைத்தியர்கள் வெளிமாவட்டங்களில் கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு போதுமானதாக இல்லை என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முறையான நடைமுறையை வகுக்குமாறும் டாக்டர் பிரசாத் கொழும்புகே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, … Read more

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ,தனங்கிளப்பில் இறால் வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம்

சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இறால் வளர்ப்பை மேற்கொண்டு நீர் வேளாண்மையை மேற்கொள்வதற்கு தொழில் முயற்சியாளர்கள் முன்வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த வேலைத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளி, சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி உஷா, தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் நிருபராஜ், கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் … Read more

எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களைக் கண்காணிக்கவும், நிகழ்நேர தரவைப் பகிரவும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த செயலியை பரீட்சிக்கும் நடவடிக்கை பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது ஏற்பட்டுள்ள … Read more

சமூக ஊடக வதந்திகள் குறித்து தேசிய நீர் வழங்கல் ,வடிகாலமைப்புச் சபை

நீர் சுத்திகரிப்பு செய்யும் இரசாயனப் பொருட்களின்; தட்டுப்பாடு காரணமாக குழாய் நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை என சமூக ஊடக விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தற்போது தண்ணீரை சுத்திகரிப்பதற்கு தேவையான இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று சபையின் உதவி பொது முகாமையாளர் (ஆய்வக சேவைகள்) ஜயலால் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குழாய் நீர் தரமானதும் குடிநீருக்கு … Read more

உலகளவில் 219 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய ஒன்றியம் ,நேற்றிரவு (25) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலக அளவில் 219 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் குரங்கு அம்மை உலகளவில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதுடன் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் பரவியுள்ளதாக கூறியுள்ளது. இந்த நோய் முதன் முதலாக ஆபிரிக்கா கண்டத்தில் பரவி உள்ளதாகவும் , மேற்கு அல்லது மத்திய ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு பரவி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவை இளைஞர்களிடையே அதிக அளவில் … Read more

லாஃப்ஸ் எரிவாயு பயனாளர்களுக்கான அறிவிப்பு

அடுத்த 6 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவோம் என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் லிட்ரோ நிறுவனம் இன்றும் நாளையும் எரிவாயு விநியோகிக்கப்படாது என அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,    எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு  Source link

ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் அமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் சந்திப்பு

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் நேற்று (25) சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சு அலுவலகத்தில் நடந்த இச்சந்திப்பில், இம்முறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கான வழிவகைகளை செய்வது பற்றியும், இதிலுள்ள தடங்கல்களை களைவது குறித்தும் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹஜ்ஜுக்கு இலங்கையிலிருந்து எவரும் செல்லவில்லை. இந்நிலையில்,இம்முறை 1585 பேருக்கு ஹஜ்கடமையை நிறைவேற்ற வாய்ப்புக்கிடைத்துள்ளது. எனினும்,நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களால்,பயண ஏற்பாடுகளில் … Read more

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் மார்ச் 1ஆந் திகதியை 'உலக கடற்பரப்பு தினமாக' பிரகடனப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்  

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இலங்கையின் அனுசரணையுடன் கூடிய A/76/L.56 தீர்மானத்தை ஏற்று மார்ச் 01ஆந் திகதியை உலக கடற்பரப்பு தினமாக 2022 மே 23 அன்று பிரகடனப்படுத்தியது. இந்தத் தீர்மானம் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 24 நாடுகளின் இணை அனுசரணையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், நிகழ்ச்சி நிரல் 15: பொருளாதார, சமூக மற்றும் தொடர்புடைய துறைகளில் முக்கிய ஐக்கிய நாடுகளின் மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகளின் முடிவுகளை இணைந்த மற்றும் … Read more

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதியை அறிவித்தது மத்திய வங்கி

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுவிஸ் பிரான்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது 367.22 ரூபாவாகவும், விற்பனை பெறுமதியானது 381.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Source link