நாடு பொருளாதார நெருக்கடிக்குச் செல்லும்வரை ,தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழு

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (கோப் குழு) பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்தார். பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தீர்மானங்கள் காரணமாக முழு நாடும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், இதனைக் குற்றமாகக் கருதி விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் … Read more

கோவிட் தடுப்பூசி தொடர்பாக வெளியான அறிவிப்பு

கோவிட் வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளும் செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கோவிட் தடுப்பூசியின் 2 வது பூஸ்டர் அல்லது 4 வது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்த நிலையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டரைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள். அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த தடுப்பூசி முக்கியமாக பரிந்துரைக்கப்படுகின்றது என கொழும்பு மாநகர சபையின் … Read more

அமைச்சர் பீரிஸ், ஐ.நா. உணவு , விவசாய அமைப்பின் பிரதிநிதி உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோருடன் சந்திப்பு  

உணவுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்காக உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையேயான மேலதிக ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர ஷரன் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்திக் ஆகியோரை 2022 மே 25 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து … Read more

நடைமுறையாகும் அதிவிசேட திட்டங்கள்! வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கையில் வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பல ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிவிசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதார நிலைமைகள் மற்றும் வங்கித்தொழில் துறையின் மீதான அதன் தாக்கத்தை கருத்திற்கொண்டு, வங்கித்தொழில் துறையின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வினைத்திறன் மிக்க நிதியியல் இடையீட்டையும் மற்றும் பொருளாதாரத்திற்கு கடன் வழங்குவதையும் வசதிப்படுத்துவதற்காக வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  Source link

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை 2022 மே 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்து, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், குறிப்பாக மருந்துப் பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பல சவால்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியின் அலுவலகம் முன்னெடுத்துள்ள … Read more

கண்டி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தி

கண்டி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கையை அறிமுகப்படுத்தும் புதிய முன்னோடித் திட்டத்தை மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ரணதுங்க பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தும் நோக்கில் பல கட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்னோடித் திட்டம்வெற்றியடைந்திருப்பதாகவும்  அவர் கூறினார். இதன் கீழ் கண்டி மாவட்டத்தின் ரங்கல மற்றும் தங்கப்புவ ஆகிய பிரதேசங்களில் உருளைக்கிழங்கு செய்கை ஆரம்பிக்கப்பட்டு அறுவடை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. … Read more

வன்முறை தொடர்பில் மகிந்தவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதற்கு முன்னர், அவருக்கு ஆதரவான குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்ததுடன் பத்து பேர் வரையில் உயிரிழந்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் … Read more

தீப்பிடித்த சில வீடுகளில் இரசாயன உரங்கள்: விசாரணை

அண்மையில் நடந்த கலவரம் காரணமாக சில அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சிலர் தீ வைத்தனர். இதையடுத்து, சில அரசியல்வாதிகளின் வீடுகளில் அதிக அளவில் யூரியா உரம் இருப்பதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின. இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் கடந்த திங்கட்கிழமை (23) கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், அந்த அரசியல்வாதிகளின் வீடுகளில் காணப்பட்ட யூரியா உரங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். … Read more