தீப்பிடித்த சில வீடுகளில் இரசாயன உரங்கள்: விசாரணை

அண்மையில் நடந்த கலவரம் காரணமாக சில அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சிலர் தீ வைத்தனர். இதையடுத்து, சில அரசியல்வாதிகளின் வீடுகளில் அதிக அளவில் யூரியா உரம் இருப்பதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின. இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் கடந்த திங்கட்கிழமை (23) கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், அந்த அரசியல்வாதிகளின் வீடுகளில் காணப்பட்ட யூரியா உரங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். … Read more

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை வரையறுக்கும் சுற்றுநிரூபம்

நாட்டில் நிலவும் வளப்பற்றாக்குறை மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவுகளைக் குறைப்பதற்காக அரச அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை வரையறுக்கும் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளரான எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனை வெளியிட்டுளளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரச நிறுவனங்களின் ஊழியர்களை அழைப்பதற்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அத்துடன் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று நடைபெறுவதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். … Read more

கடற்பரப்புக்களில் காற்றின் வேகம்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 26ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ … Read more

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் இல்லை – கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக முக்கியப் பங்காற்றி வருவதாக கலாநிதி குமாரசுவாமி தெரிவித்தார். நிதி அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநரில் மாற்றம் ஏற்படலாம் என … Read more

இரட்டைப் பொறுப்பை வகிக்க தயாராகும் ரணில் – காத்திருக்கும் சவால்கள்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக இரட்டைப் பொறுப்பை வகிப்பார் என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. அத்துடன், நாடு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிணையெடுப்பு கோரும் போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ரொய்ட்டர்ஸுக்கு அளித்த செவ்வியில் … Read more

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் கடும் வீழ்ச்சி

கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக சமீப நாட்களாக பேக்கரிஉற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இத்தொழிலை நடத்தும் தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர். ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வு, பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக விற்பனை சரிந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், எரிவாயு நெருக்கடி மற்றும் அத்தியாவசிய … Read more

23.8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கண்டுபிடிப்பு

நான்கு மேற்கத்திய நாடுகளில் இருந்து பத்துப் பொதிகளாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 23.8 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ என்ற கஞ்சா போதைப் பொருளை (24) மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் காரணமாக மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் இவற்றை, கொழும்பு சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்திருந்ததாகவும்.  ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி , கனடா, மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பொதிகள், சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, பொலிஸ் … Read more

இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவோம் – உலக வங்கி

இலங்கை மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளர்களுடன் ஒருங்கிணைந்து, இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. உலக வங்கி இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.   எவ்வாறாயினும், போதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் வரையில், இலங்கைக்கு புதிய நிதி உதவிகளை வழங்கத் திட்டமிடுவதில்லை என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.       உலக வங்கி இலங்கை தொடர்பில் … Read more

நீதிமன்றின் உத்தரவை மீறிய மகிந்த – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

 நீதிமன்ற உத்தரவை மீறி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர், இதுவரை தமது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர், நீதிமன்றில் இன்று (25) இதனை அறிவித்துள்ளார். கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குற்றப் புலானாய்வு பிரிவு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக … Read more