மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுநர் போட்டியை ஆரம்பித்து வைத்த கடற்றொழில் அமைச்சர்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட ரீதியிலான மாற்றுத் திறனாளிகளுக்கான மெய்வல்லுநர் போட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (25) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். வாழ்கையில் தம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் வகையிலான இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை வரவேற்பதாகவும் இதற்கு என்னுடைய முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் கடற்றொழில் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் கடந்த … Read more

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம் : பிரதமர் தெரிவிப்பு

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ‘இரண்டு வருட’ நிவாரணத் திட்டத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ராய்ட்டர் செய்திச் சேவைக்கு நேற்று (24) அளித்த பேட்டியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பதவியேற்ற பிரதமர் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் மேலும் பணவீக்கம் உயர்வடையும் எனவும் மேலும் தெருக்களில் … Read more

இலங்கையில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயம்! வெளியாகியுள்ள தகவல்

அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் டானியா அபயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இனி தங்களது தொழிலை நடத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரை காலமும் சேமிப்பில் தங்களுடைய தொழில்களை நடத்தி வந்தோம். எனினும்,தற்போது அதனை தொடர்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். … Read more

இலங்கை மத்திய வங்கி வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் அதிவிசேட வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கி, தற்போதுள்ள பேரினப் பொருளாதார நிலைமைகள் மற்றும் வங்கித்தொழில் துறையின் மீதான அதன் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, வங்கித்தொழில் துறையின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்தும் அதேவேளை, வினைத்திறன் மிக்க நிதியியல் இடையீட்டையும் மற்றும் பொருளாதாரத்திற்கு கடன் வழங்குவதையும் வசதிப்படுத்துவதற்காக வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் பின்வரும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/press_20220525_cbsl_implements_extraordinary_measures_to_support_banking_sector_t.pdf

தப்பியோடியதாக சந்தேகிக்கப்பட்ட மகிந்தவின் மகன் கறுப்பு உடையில் மீண்டும் வருகை

கோட்டா கோ கம மீது குண்டர் மேற்கொண்ட தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் யோசித ராஜபக்ஷ இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 9ஆம் திகதி கொழும்பில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முதல் யோசித்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிருந்தார். அவுஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த போதும், மகிந்த தரப்பினால் அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் யோசித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் இன்று கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை … Read more

மதுசாரம், போதைப்பொருள் – விழிப்புணர்வு; யாழ். பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பிலான சமூக விழிப்புணர்வை உருவாக்குவது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்  நிலையமும் கைச்சாத்திட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு இன்று (25.05.2022) யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தில் நடைபெற்றபோது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்  நிலையம் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகரவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம், கலைப்பீடப் பிரதிப் பதிவாளர் திருமதி அனுஷா சிவனேஸ்வரன், ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல்  நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி ஏ.சி. ரஹீம் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் செயற்பாடுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் இணைந்துகொள்ளவிருக்கின்றனர். குறிப்பாக, மக்கள் மத்தியில் மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாவனையினால் ஏற்பட்டுவரும் சமூகச் சிக்கல்கள் பற்றிய ஊடகங்கள்வழி விழிப்புணர்விற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதுடன், அதுதொடர்பான ஊடகப்படைப்புக்களை உருவாக்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவர். அதேவேளை, இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாவனைக்கு எதிரான கருப்பொருளைக் கொண்ட குறும்படப் போட்டியும், செயலமர்வுகளும் மாணவர்களுக்கு நடாத்தப்படவுள்ளன. வட மாகாணத்தில் மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாவனையினை ஊக்குவிக்கும் ஊடகப் பண்பாடு பற்றிய ஆய்வுகளையும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்  நிலையத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளவுள்ளனர்.  

6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில் – கோபா குழு அறிக்கை

மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகின. இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை என அடையாளம் காணப்படும்போது 99 வீதமானவை நோயளிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரமற்ற (quality fail) மருந்துகளுக்கான செலவினை வங்குநர்களிடமிருந்து அறிவிட்டுக் கொள்ள முடியாமல் போயுள்ளது. ஔடதங்களின் உறுதித்தன்மை காணப்படும் வகையில், உரிய தரத்தில் … Read more

70 மில்லியன் ரூபா முறைகேடு! நாமல் ராஜபக்ச தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தொடர்பான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர். கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரே இன்று இதனை நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கை செப்டம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட், … Read more

வரையறுக்கப்பட்ட டபிள்யு. எம். மெண்டிஸ் , நிறுவனம் ஒரே சொத்தை இரு அரச வங்கிககளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் கோப் குழுவில் அவதானம்

வரையறுக்கப்பட்ட டபிள்யு. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனம் ஒரே சொத்தை இலங்கை வாங்கி மற்றும் மக்கள் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் கோப் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கை வங்கியின் 2018 மற்றும் 2019 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராயும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தலைமையில்  (24) நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய  குழுக் கூட்டத்தின் போதே … Read more