வரையறுக்கப்பட்ட டபிள்யு. எம். மெண்டிஸ் , நிறுவனம் ஒரே சொத்தை இரு அரச வங்கிககளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் கோப் குழுவில் அவதானம்

வரையறுக்கப்பட்ட டபிள்யு. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனம் ஒரே சொத்தை இலங்கை வாங்கி மற்றும் மக்கள் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் கோப் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கை வங்கியின் 2018 மற்றும் 2019 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராயும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தலைமையில்  (24) நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய  குழுக் கூட்டத்தின் போதே … Read more

சிறந்த கொள்கைத் தீர்மானங்களுக்கு அரசியல்வாதிகள் கட்சி பேதம் இன்றி ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையின் உண்மை யதார்த்தத்தை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்ளை ரீதியான தீர்மானங்களுக்கு குறுகிய அரசியல் லாபம் இன்றி கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்  இன்று (24) அரசாங்க நிதி பற்றிய குழுவில் கோரிக்கை விடுத்தார். இதற்கு முன்னர் எரிபொருளுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்களைத் தொடர்ந்து அதனை செயற்படுத்த முடியாமல் போன … Read more

பிரதமராக பதவியேற்க இன்றும் நான் தயார்! சஜித்தின் மீள் அறிவிப்பு

பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், அதிகாரத்திற்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்கமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நான் பொறுப்பேற்க முடியாது என்று கூறவில்லை. இன்றும் பிரதமராக பதவியேற்க நான் தயாராக இருக்கிறேன். நான் பிரதமராக பதவியேற்று தூய்மையான ஆட்சியை செயல்படுத்த விரும்புகிறேன், ஆனால் துரோகங்களை அனுமதிக்க மாட்டோம். நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நான் இப்போது என் தந்தையைப் போல் மிகவும் … Read more

லக்னோ – பெங்களூர் அணிகளுக்கிடையில் இறுதி சுற்றுக்கு தகுதி காணும் போட்டி இன்று

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (25) நடைபெறும் வெளியேற்றல் சுற்றில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன. ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. நேற்று (24) தொடங்கிய ‘பிளே ஆப்’ சுற்றில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. … Read more

பலர் வேலை இழக்கும் அபாயம்! இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் கைவிரித்த மத்திய வங்கியின் ஆளுநர்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஒரு வாரத்திற்குப் போதுமான பொருட்களை வாங்குவதற்குக் கூட வருமானம் இல்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று கூற முடியாது. நாட்டில் தற்போது உள்ள வெளிநாட்டு கையிருப்பு ஒரு வாரத்திற்கு போதுமானதாக … Read more

உணவு பொருட்களின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கிறது! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறும், அதனை விட விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும் சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.  வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதனால் அதனை விட விலையை அதிகரிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.  எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது. எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின் … Read more

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் வளைகுடா நாடு

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் வளைகுடா நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியாவில் நேற்று(24) முதலாவது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் ஆப்பிரிக்கா நாட்டிற்கு வெளியில் பரவியுள்ள வைரசினை கண்டறிய 18 நாடுகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மேற்கு ஆப்பிரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பயணி ஒருவரின் மூலமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பரவியதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .மேலும் அங்குள்ள அதிகாரிகள் எந்தவொரு தொற்று பரவலை … Read more

இம்மாத இறுதியுடன் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை … Read more

எரிபொருள் விநியோக தடைகள் குறித்து பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று (24) வரை நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கோரப்பட்டிருந்த அனைத்து எரிபொருட்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்பதுன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் … Read more

டொலரொன்றின் இன்றைய மதிப்பு

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 35 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளது.  அதேசமயம், யூரோ ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி ரூபா 391.02 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி  ரூபா 380.22 சதமாக பதவாகியுள்ளது.  Source link