எரிபொருள் விநியோக தடைகள் குறித்து பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று (24) வரை நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கோரப்பட்டிருந்த அனைத்து எரிபொருட்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்பதுன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் … Read more

டொலரொன்றின் இன்றைய மதிப்பு

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 35 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளது.  அதேசமயம், யூரோ ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி ரூபா 391.02 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி  ரூபா 380.22 சதமாக பதவாகியுள்ளது.  Source link

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் , தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 25.05.2022

கோட்டாபய ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் – தனிநபரின் கடன் சுமை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்தக் கடன் 525,200 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மத்திய வங்கியின் 2021ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன் அதிகரிப்பு காரணமாக 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனிநபர் கடன் சுமை 882,150 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் போது அந்த தொகை 643,422 ரூபாயாகும். அதற்கமைய, கடந்த … Read more

இன்று விநியோகம் இல்லை: லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு (Video)

இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம், Source link

தொடரும் நெருக்கடி நிலை…..! இலங்கை வர அச்சப்படும் அவுஸ்திரேலிய வீரர்கள்

மின்வெட்டு மற்றும் பிற பிரச்சினைகளால் மக்கள் அவதிப்படும் நேரத்தில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளனர். எப்படியிருப்பினும் அடுத்த மாத சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அதிகாரிகள் எடுக்கும் முடிவை தாங்கள் ஆதரிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், அவுஸ்திரேலிய வீரர்கள் அடுத்த வாரம் பயணிக்கவுள்ளனர். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டங்கள் வன்முறையாக மாறியது. எனினும் … Read more

பாலிந்த-நுவர, புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம்

தற்போது பெய்துவரும் மழைக்கு மத்தியில் எதிர்வரும் ஆறு மணித்தியாள காலப்பகுதிக்குள் பாலிந்த-நுவர, புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக நீர்ப்பாச திணைக்களம் எச்சரித்துள்ளது. இதற்கமைவாக புளத்சிங்கள – மொல்காவ வீதி – வரகாகொட -கலவெல்ல வீதி – நாலியத்த- தபல வீதி முதலான் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதிகளை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். களுகங்கையின் நீர்மட்டம் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துள்ளமை இதற்கான காரணமாகும். களுகங்கையின் பல்வேறு … Read more

கட்சித் தலைவர்களின் கருத்துக்களுடன், 21 ஆவது அரசியல் அமைப்புத்திருத்தம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும்

21 ஆவது அரசியல் அமைப்புத்திருத்தம் அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,திருத்த யோசனை தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் இவ்வாரம் கலந்துரையாடி அவர்களின் யோசனைகளையும் உள்வாங்கிதாக இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் … Read more

இலங்கையை கைவிட்ட உலக வங்கி – நிதியுதவி வழங்க புதிய நிபந்தனை

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக வங்கி இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளதென உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் … Read more