எரிபொருள் விலை சூத்திரம்

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், போக்குவரத்து கட்டண திருத்தம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள 1044 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் … Read more

மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்

மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பிட்ட சிலர் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டு, கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான வியாபார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளதாக உறுதியளித்த அமெரிக்காவின் பெரும்புள்ளி

பொருளாதார நெருக்கடியால் நலிவடைந்துள்ள இலங்கைக்கு உதவி செய்ய அமெரிக்காவின் முன்னாள் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா முன்வந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார். கலந்துரையாடலின் போது சமகால நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் , G7 நாடுகள் போன்ற அமைப்புகளுடன் நெருங்கி செயற்படவுள்ளதாகவும் சமந்தா பவர் உறுதியளித்தார் . இந்த மாத தொடக்கத்தில் அரசியல் அமைதியின்மையால் கொல்லப்பட்ட அல்லது … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப பேச்சுவார்த்தை நிறைவு

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடல்களை இன்று நிறைவு செய்வதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு உதவுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு எரிபொருள்

எரிபொருட்கள் இல்லாமல், வயல் உழுதல் மற்றும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம், எதிர்வரும் இரு தினங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். அதன்படி விவசாயிகளுக்கு கலன்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விவசாய அமைச்சில் நேற்று கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் மேலும் ஒரு அறிவிப்பு

நாளைய தினமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது  என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.   12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.  லிட்ரோ நிறுவனம் இன்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியிருந்தது.  இந்த நிலையில் சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வரிசைகளில் நிற்க வேண்டாம் என நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.  இலங்கையில் தற்போது எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக் … Read more

2022 ஐ.பி.எல்:குஜராத், ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

2022 ஐ.பி.எல் போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணியை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இன்று (24) களமிறங்குகின்றன. 15 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடந்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை … Read more

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் சுற்றுநிருபம்

அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (24) வெளியிடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாவதனால், பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (24) வெளியிடப்படும் என்றும் … Read more

அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது

உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக மரக்கறிகள், இறைச்சி பொருட்கள், பால் பொருட்கள், முட்டை மற்றும் மீன் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார். கிட்டத்தட்ட 60 சதவீத பொது மக்களுக்கு உணவு வழங்க முடியவில்லை, மேலும் நேற்றிரவு எரிபொருள் விலை உயர்வு மேலும் பட்டினி … Read more

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான, பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள்

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு தரம் ஆறாம் ஆம் வகுப்புக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் பெற்ற பள்ளிகளின் அடிப்படையில் தெரிவாகியுள்ள பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/publicuser என்ற இணையதளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும். இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,கொழும்பு றோயல் கல்லூரி (ஆண்கள்  தமிழ் மொழி மூலம்), மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 178 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் … Read more