அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது

உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக மரக்கறிகள், இறைச்சி பொருட்கள், பால் பொருட்கள், முட்டை மற்றும் மீன் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார். கிட்டத்தட்ட 60 சதவீத பொது மக்களுக்கு உணவு வழங்க முடியவில்லை, மேலும் நேற்றிரவு எரிபொருள் விலை உயர்வு மேலும் பட்டினி … Read more

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான, பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள்

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு தரம் ஆறாம் ஆம் வகுப்புக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் பெற்ற பள்ளிகளின் அடிப்படையில் தெரிவாகியுள்ள பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/publicuser என்ற இணையதளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும். இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,கொழும்பு றோயல் கல்லூரி (ஆண்கள்  தமிழ் மொழி மூலம்), மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 178 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் … Read more

அதிகபட்ச எரிபொருள் கொள்வனவு வரையறையில் மாற்றம்

வாகனங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச எரிபொருள் வரையறையில் இன்று (24) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதனால் ,இதுவரையிலும் இருந்துவந்த  எரிபொருள் கொள்வனவு வரையறையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். அதற்கமைவாக மோட்டார் சைக்கிள்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபாவுக்கும் , முச்சக்கர வண்டிகளுக்கு மூவாயிரம் ரூபாவுக்கும், கார், வேன்களுக்கு 10ஆயிரம் ரூபாவுக்கும எரிபொருள் வழங்கப்படும். மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பதற்கு நேற்றைய தினம் அனுமதி கோரப்பட்ட போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக … Read more

எரிபொருள் கொள்வனவுக்கு இந்திய வங்கிகள் கடனுதவி

இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்திய வங்கிகளின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறுகிய கால கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. அதற்கு மேலதிகமாக இந்திய அரச வங்கியொன்றிடமிருந்து மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் கடன் தொகையைக் கொண்டு … Read more

32 ரூபாவாக உயர்த்தப்படும் குறைந்தபட்ச கட்டணம்: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பேருந்து பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.  முதலாம் இணைப்பு இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 25 – 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார். விலைசூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் … Read more

மத்திய வங்கி அனைத்து வங்கிகளுக்கும் விடுத்துள்ள அறிவுறுத்தல்

சில அத்தியாவசியமற்ற மற்றும் அவசமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் கடைபிடிக்ககப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பிட்டு இலங்கை மத்திய வங்கியினால் அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் தேசிய சேமிப்பு வங்கிக்கும் அறிவிப்பொன்றை விடுதுள்ளது. வங்கி கட்டமைப்புக்கள்; செலவாணி விகித ஸ்தீரத்தன்மை மற்றும் செலவாணியை எளிதில் பணமாக்கக்கூடிய நோக்கத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் சிபாரிசுக்கு அமைவாக  இந்த நடலடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்யும் வip முறைகளின் போது கடன் சான்று பத்திரத் Letter of … Read more

தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. உறுதி

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டியை 2022 மே 23ஆந் திகதி சந்தித்தார். எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களை அரசாங்கம் முன்னறிவித்துள்ளதாகவும், பாதிப்புக்களைக் குறைக்கும் முகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். சர்வதேச நாணய … Read more

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளன.  அதற்கமைய தமிழ் மொழிமூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி விபரங்களை கீழுள்ள இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும்.  வெட்டுப் புள்ளிகளை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.. Source link

வெளிநாட்டுக்கடன் மறுசீரமைக்காக சட்ட ஆலோசனைகளை சர்வதேச நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

வெளிநாட்டுக்கடன் மறுசீரமைக்காக சட்ட ஆலோசனைகளை சர்வதேச நிறுவனத்திடம் பெற்றுககொள் அரசாங்கம் தீர்மானம் இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டுக்கடனை மறுசீரமைப்பை மேற்கொள்வது தொடர்பில் தேவையான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனமான யின் சேவையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 04. இலங்கை அரசின் வெளிநாட்டு படுகடன்களை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நிதியியல் மதியுரைஞர் மற்றும் சர்வதேச சட்ட மதியுரைஞர் சேவைக்கான பெறுகைக் கோரல் இலங்கை … Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள்  விநியோகத்தில் சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி,  இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்கள், கார்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும்.  எனினும், பேருந்துகள், … Read more