உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள்  விநியோகத்தில் சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி,  இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்கள், கார்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும்.  எனினும், பேருந்துகள், … Read more

2022.05.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2022.05.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.) 01. இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்காக குறுகியகால கடன்களைப் பெற்றுக் கொள்ளல்   நாட்டில் நிலவிவரும் பொருளாதார நிலைமையால் எமது நாட்டுக்குத் தேவையான பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்புடன் 500 … Read more

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதாள உலக குழு அச்சுறுத்தல் – ஆபத்தான நிலையில் மக்கள்

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாதாள உலகக்குழுவின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடுவெல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதாள குழுவினர் அட்டகாசம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. எரிபொருள் நிலையங்களுக்கு வரும் ரவுடிகள், பொலிஸார் முன்னிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களையும், வரிசையில் நிற்கும் மக்களையும் அச்சுறுத்தி தங்களின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுச் செல்கின்றனர். பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் மக்களை பொலிஸார் முன்பாகவே அச்சுறுத்தி தாக்கும் சம்பவங்கள் … Read more

குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி

அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமாம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் , இம் மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் ரூ. 5000 முதல் 7500 வரையிலான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 17,65,000 சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், 7,30,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முப்பத்து மூன்று இலட்சம் (3300000) முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் … Read more

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: போக்குவரத்து கட்டண திருத்தத்திற்கு அனுமதி

இலங்கையில் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை விலைசூத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு … Read more

பொலிஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபர் கைது

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து மருதானை பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை தாக்கி பொலிஸ் வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் மருதானை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளாகிய பொலிஸ் அத்தியட்சகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தின் பின்னர் … Read more

இன்று அதிகாலை முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 … Read more

இலங்கையில் இருந்து ஆடைத் தொழிற்சாலைகளை வெளியேற்ற முயற்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சுமார் 30 வீதமான ஆடைத் தொழிற்சாலைகள் வேறு நாடுகளில் அமைக்கப்பட்டு வருவதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதி பொருட்களை சந்தைக்கு வெளியிட முடியாத நிலை, மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றனவே இதற்கு காரணம் என அதன் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் … Read more

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு சிஐடியில் முன்னிலையாகுமாறு அழைப்பு

மே மாதம் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியைச் சேர்ந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் 21 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் கடந்த வாரம் (16) உத்தரவிட்டார். இதன்படி, … Read more

மீண்டும் வலுவடையும் காலி முகத்திடல் போராட்டம்

நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு- காலிமுகத்திடலில், பொதுமக்கள் தொடர்ந்தும்  45ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டமானது கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.   இதேவேளை கடந்த மே-09ம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகாரர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் அரச ஆதரவாளர்களால் வன்முறைகள் தோற்றுவிக்கப்பட்டதை அடுத்து   முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச  பதவி விலகியிருந்தார்.   இதேவேளை மகிந்த ராஜபக்ச பதவி … Read more