புதிய வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன் புதிய வெகுசன ஊடக அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள், அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் பொல்ஹேன்கொட வெகுசன ஊடக அமைச்சிற்கு வருகை தந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்த கலாநிதி குணவர்தன, வெகுசன ஊடக அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ … Read more

இலங்கையில் தொடர்பில் சாதகமான தகவலை வெளியிட்ட மத்திய வங்கி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விரையில் சாதகமான நிலையை எட்டும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகள் வெற்றியடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசத்துடான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் அடுத்த 12 மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை அடையும் சாத்தியப்பாடுகள் தென்படுவதாக மத்திய … Read more

காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் இவர்தான்! அநுர பகிரங்க அறிவிப்பு

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டமைக்கு முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியது மகிந்த ராஜபக்சதான் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  அவர்தான் வன்முறையை ஏற்படுத்திய காடையர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அங்கு  மதுபானமும், பொல்லுகளும் வழங்கப்பட்டு அவர்கள்  ஏவிவிடப்பட்டுள்ளனர். அதற்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட உறுப்பினர்கள் காரணமாக உள்ளனர். பின்னர் … Read more

யாழில் ஒரு ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி

யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று ஒரு கிலோ நாட்டரிசியை ஒரு ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.இதன் காரணமாக மக்கள் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மக்களை மீட்பதும், குறைந்த செலவில் பொருட்கள் கொள்வனவு மூலம் அவர்களின் மனதை திருப்திப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் சுமித்ரயோ சங்கத்தினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைவாக யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு கிலோ … Read more

சர்வகட்சி அரசாங்கத்தின் 08 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

சர்வகட்சி அரசாங்கத்தின் 08 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று, (23) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். திரு. டக்ளஸ் தேவானந்தா –  கடற்றொழில் அமைச்சர் திரு. பந்துல குணவர்தன    – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் , வெகுஜன ஊடக                                                   … Read more

இன்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்

நாடளாவிய ரீதியில் இன்று (23) எரிவாயு விநியோகிக்கப்படும் முறை மற்றும் எரிவாயு விற்பனைக்காக உள்ள விற்பனை முகவர் நிலையங்கள் தொடர்பாக லிட்ரோ நிறுவனம் விசேட அறிக்கைiயான்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (23) நாடளாவிய ரீதியில் உள்ள 394 விற்பனை முகவர் நிலையங்களின் ஊடாக  எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு விற்பனை நிலையத்திற்கும் விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை குறித்தும் லிட்ரோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.    

இலங்கையின் தற்போதைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இருக்கும் ஒரேயொரு வழி இது தான்!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சகல பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு தீர்வே உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண்பதற்கு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே ஒரே தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கோரிக்கைகளை அரசியல்வாதிகள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிவாயு, பால்மா, எரிபொருள், உரம் போன்றவற்றை மக்கள் கோரிய போது ஜனாதிபதியோ, … Read more

சாதாரண தரப் பரீட்சை எந்த சிக்கலும் இன்றி ஆரம்பம்

இன்று ஆரம்பமான 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளின் வருகை 99 வீதமாக பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சை நாடு பூராகவும் பரீட்சை நிலையங்களில் சிறப்பாக நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் இன்று காலை உரிய நேரத்தில் பரீட்சைகள் ஆரம்பமாகியதாகவும் அவர் குறிப்பிட்டார். இம்முறை, நான்கு லட்சத்து ஏழாயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும், ஒரு லட்சத்து பத்தாயிரத்து 367 … Read more

குசல் மெண்டிஸ் டாக்கா வைத்தியசாலையில் அனுமதி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ,மீப்பூரில் இன்று (23) காலை ஆரம்பமானது.இதன் போது பங்களாதேஷ் இன்னிங்ஸின் 23 ஆவது ஓவரில் அவர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக,  மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக டாக்காவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.42 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்வனவு விலையானது 354.45 ரூபாவாக பதிவாகியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.  டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு  Source link