இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.42 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்வனவு விலையானது 354.45 ரூபாவாக பதிவாகியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.  டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு  Source link

யுபுன் அபேகோன் 200 மீற்றர் ஓட்ட போட்டியில் தெற்காசிய சாதனை

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டபோட்டியில்  யுபுன் அபேகோன் நேற்று (22) புதிய தேசிய சாதனையையும், தெற்காசிய சாதனையையும் படைத்துள்ளார். இத்தாலியில் நடந்த தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்ட தூரத்தை 20.37 வினாடிகளில் நிறைவு செய்தார். இதன்மூலம் இந்தியாவின் அம்லான் போர்கோஹைன் 20.52 வினாடியில் நிலைநாட்டிய  தெற்காசிய சாதனையை யுபுன் அபேகோன் முறியடித்தார். 2018 ஆம் ஆண்டு இலங்கையில் வினோஜ் சுரஞ்சய 20.68 வினாடிகளில் நிலைநாட்டிய தேசிய சாதனை யுபுன் அபேகோனினால் முறியடிக்கப்பட்டுள்ளது. யுபுன் அபேகோன் 100 … Read more

15 மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அரசியல்வாதிகள் யாருடைய ஆலோசனையின் பேரில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என்பது தெரியவில்லை என்று கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறுகின்ற நேரத்தில் மற்றும் இன்று (23) மாலை 06.30 மணி முதல் ஜூன் மாதம் … Read more

இலங்கையில் உச்சம் தொட்டுள்ள மரக்கறிகளின் விலை

இலங்கையில் சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதற்கமைய,”தக்காளி ஒரு கிலோவின் விலை 1,000 ரூபாவாகவும், போஞ்சி ஒரு கிலோவின் விலை 480 ரூபாவாகவும், கரட் 400 ரூபாவாகவும், மிளகாய் ரூ.480.00 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, டீசல் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகர்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்யாமை போன்ற காரணிகளால் தம்புத்தேகம விசேட பொருளாதார வலயத்திற்கு கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டுள்ளனர். … Read more

குரங்கு அம்மை நோய் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும்

உலகின் பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் தொடர்பில் ,இலங்கையும் கூடுதல் அவதானம் செயலுத்த வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும்  களைப்பு என்பன இந்த நோயின் அறிகுறிகளாக காணப்படும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். மே மாதம் 13 ஆம் திகதி வரையிலும் உலகம் முழுவதும் 92 குரங்கு அம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இருப்பினும், … Read more

கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை அவரது பயணத்தடையை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  பல நிதி மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மனுவை முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ளார். Source link

இந்த பெண்ணை கண்டால் அறிவிக்கவும் – பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

முக்கிய சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பெண் ஒருவரை கண்டுபிடித்த பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தோன்றிய பெண் அலுவலகத்தைத் தாக்கி தீவைக்க முன்வந்துள்ளார். இதற்கு சம்பந்தப்பட்ட … Read more

சாதாரண தரப் பரீட்சைக்கு 15 கைதிகள் தோற்றவிருப்பதாக தெரிவிப்பு

இன்று (23)ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 15 கைதிகள் தயாராக இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதியும், நிவ் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கைதிகள் நால்வரும், வட்டரெக சிறைச்சாலை சுனிதா பாடசாலையில் 10 மாணவ குற்றவாளிகள் அடங்கலாக 15 கைதிகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்கள் அனைவரும் நிவ் மகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரெக சிறைச்சாலை சுனிதா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக … Read more

விசேட ரோந்து பணிகளில் பொலிஸார்: பரீட்சை நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் ஒரு சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை வினாத்தாள் போக்குவரத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும், பொலிஸார் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சை நடைபெறும் காலத்தில் வீதிகளை மறித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களிடம் … Read more