பரீட்சை மத்திய நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று ஆரம்பமாகும் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை 3,844 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது பரீட்சை நிலையங்களை ஒருங்கிணைப்பு செய்வதற்காக 542 மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கமைவாக ஒவ்வொரு பரீட்சை நிலையங்களிலும் ஒரு பொலிஸ் சார்ஜண்ட் . மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பரீட்சார்த்திகளுக்கான வினாபத்திரங்கள் மற்றும் விடைத்தாள்கள் எடுத்துச்செல்லும் போது நடமாடும் பொலிஸ் ரோந்து பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் … Read more

இலங்கை எழுத்தாளர் ரு ஃப்ரீமேனை பாராட்டிய அமெரிக்க தூதுவர்

இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ரு ஃப்ரீமேனின் படைப்புகளை பாராட்டி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ட்வீட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அப் பதிவில் இலங்கை-அமெரிக்க எழுத்தாளர் ரு ஃப்ரீமேன் போன்ற படைப்பாளர்களை தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். During Asian-American, Native Hawaiian & Pacific Islander Heritage month we recognize Sri Lankan-American authors like Ru Freeman. Her novels, including On Sal Mal Lane, explore the intersection of childhood … Read more

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

குவாட் உச்சிமா நாட்டையொட்டி உக்ரைன் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மே 24-ம் திகதி டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். I look forward to meeting @POTUS @JoeBiden, PM @kishida230 and newly elected Australian PM @AlboMP. Our interactions … Read more

சிறையிலிருந்த போதிலும் ரஞ்சன் மனச்சாட்சிக்கு துரோகம் இழைக்கவில்லை! – சஜித் தெரிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்க ஒருபோதும் யாருக்கும் தனது மனச்சாட்சியைக் காட்டிக்கொடுக்காத உண்மையுள்ள மக்கள் பிரதிநிதி எனவும், சிறைவாசம் அனுபவித்த போதிலும் அவர் தனது சுயமரியாதையைக் காப்பாற்றினார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ஒருமுறை கூறியது போல், “அவர்கள் அனைவரும் நண்பர்கள் தம்பி” என்ற கூற்று இந்நேரத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ரஞ்சன் அவர்களின் நண்பன் இல்லாததால் இன்னும் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று பிற்பகல் தடுத்து … Read more

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை: அநுரகுமார காட்டம்

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நுவரெலியா – சினிசிட்டா மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ரணிலும், கோட்டாபயவும் ஒரே அணியாக இருப்பது வெளியில் நன்றாகத் தென்படுகின்றது. ஒருவரை ஒருவர் காப்பாற்றும் செயற்பாடு இதற்குச் சான்று. மகிந்த ராஜபக்ச அன்று … Read more

எப்போதும் நான் ஜனாதிபதியை நீராட்டியது இல்லை: அப்படியொரு இடமும் இங்கில்லை – ஞானாக்கா தகவல்

அரசியல் விடயங்கள் மாத்திரமல்லாது நாட்டை ஆட்சி செய்வது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தான் ஆலோசனை வழங்கி வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ஞானாக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய என்ற பெண் தெரிவித்துள்ளார். வாராந்த பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் மற்றும் இராணுவ அனுசரணையின் அடிப்படையில் எனக்கு பிரதிபலன்கள் கிடைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. நான் உருவாக்கிய அனைத்தும் நான் வியர்வை … Read more

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1500

கடந்த மே 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை சுமார் 1500 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 677 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் 08 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இச்சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 152 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 101 … Read more

இலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது. உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை வைத்தியசாலை … Read more