இலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது. உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை வைத்தியசாலை … Read more

இந்திய மனிதாபிமான நிவாரண பொருட்கள் ,வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் கையளிப்பு

இரண்டு பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியான இந்திய மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் ,இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவினால் ,வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசிடம் கையளிக்கப்பட்டன.. கொழும்பில் இன்று (22) இடம்பெற் இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதமரின் பணிக்குழாமின் தலைமை அதிகாரி திரு. சாகல ரத்நாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், உணவு. ஆணையர் திருமதி ஜே. … Read more

2021 சாதாரண தரப் பரீட்சை: பரீட்சார்த்திகளுக்கு ஆகக்கூடுதலான வசதிகள் -பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையை சரியாகக் கணிப்பிட்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு அனைத்துப் பரீட்சார்த்திகளிடமும் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இடையில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால் திரும்பிச் செல்லாது பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ரெயில் சேவையைப் போன்று ஏனைய போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறுகின்றன. … Read more

என்னை மன்னித்து விடுங்கள்..! பிரதம நீதியரசரிடம் கோரியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பிரதம நீதியரசருக்கு நேரடியாக அனுப்பிய கடிதம் தொடர்பிலேயே ஜெகத் அல்விஸ் தமது மன்னிப்பைக் கோரியுள்ளார். இந்த கடிதம் தொடர்பில், ஜெகத் அல்விஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பிரதம நீதியரசர், சட்டமா அதிபருக்கு அறிவித்தமையை அடுத்தே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. தனது அதிகாரத்தை மீறி, மேஜர் ஜெனரல் அல்விஸ், பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதியமைக்காக சட்டமா … Read more

நாளை (23) க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி : பரீட்சையினை வெற்றிகரமாக நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவும்

க.பொ.த. சாதாரண தர பரீட்சையினை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும், பரீட்சையினை எவ்வித தடையுமின்றி நடாத்துவதற்கு அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் அனைத்து பொதுமக்களிடத்திலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2021 க.பொ.த. (சா/த) பரீட்சையின் போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டே அமைச்சர் இவ்வாறு … Read more

இரண்டு வாரங்களுக்கு தேவையான எரிவாயு

எரிவாயுவைக் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு நாளைய தினம் பணம் செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து ,நாட்டில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான எரிவாயு இருக்குமென்று லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு கப்பல்களுக்கும் நாளை 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளன. நிறுவனத்திடம் தற்போது 6 தினங்களுக்குப் போதுமான எரிவாயுவே உண்டு. இன்று முதல் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இவற்றில் 30 ஆயிரம் கொழும்பு – கம்பஹாவிற்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது. தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King … Read more

கெஸ்பாவ எரிபொருள் நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம்

கெஸ்பாவ எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பொல்கஸ்-ஓவிட்ட எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் சில தினங்களுக்கு முன்னர் கெஸ்பாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டதினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் வீதித் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டால் குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படுமென்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடிக்கு சபாநாயகர், பிரதமருக்கு ஆலோசனை

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதற்கமைவாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை வைப்பீடு செய்வோருக்கு 6 மாதங்களின் பின்னர் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு சுங்கவரியற்ற அனுமதிச் சான்றிதழை வழங்குவதற்கு சபாநாயகர் பரிந்துரைத்துள்ளார். இதேபோன்று வாகனங்களுக்கான வரியாhக அரசாங்கத்திற்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணியாற்றும் அல்லது வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் … Read more

இலங்கையில் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுவது உறுதி! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாக தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற்றுக் கொள்வது மக்கள் மத்தியில் … Read more