மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்கள்

கொலன்னாவை பிரதேசத்தில் பேக்கரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. வர்த்தகர் சந்தையில் நிலவும் விலையை விட இரட்டிப்பான விலைக்கு காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்

உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடம் கொடுத்தார்கள் ஒரு பிரித்தானிய தம்பதியர். பத்தே நாட்களில் தன் மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, அந்த உக்ரைன் அகதியுடன் ஓட்டம் பிடித்துவிட்டார் அந்த பிரித்தானியர். இங்கிலாந்திலுள்ள Bradfordஇல் வாழும் Tony Garnett (29), Lorna (28) தம்பதியர், உக்ரைனிலிருந்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த Sofiia Karkadym (22) என்ற இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், Sofiiaவைப் பார்த்த உடனே Tonyக்கும், Tonyயைப் பார்த்த … Read more

எரிபொருளை களஞ்சிய படுத்துபவர்களுக்கு எதிராக நாளை முதல் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படுமென்று பொலிசார் அறிவித்துள்ளனர். இவ்வாறானவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான பணிகளில் ஈடுபடுபவர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நாளை விசேட வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவுக்குள் பிரதமருக்கு எதிர்ப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தான் பிரதமராக பதவியேற்ற பின்னர், 5 பில்லியன் டொலர் கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கூறியிருந்தமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும் இதுவரை 5 பில்லியன் டொலர்களை மாத்திரமல்ல, டொலர்கள் எதனையும் நாட்டுக்கு கொண்டு வர பிரதமர் தவறியுள்ளதாக கூறியே பொதுஜன பெரமுனவுக்குள் இந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் “டெங்கு” தீவிரம்

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு வீரியம் அதிகரிப்பு உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை,கிண்ணியா,மூதூர்,உப் புவெளி,குச்சவெளி முதலான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலை பகுதியில் 203 பேரும், மூதூரில் 203 பேரும், கிண்ணியாவில் 77பேரும் ,உப்புவெளியில் 76பேரும்  டெங்கு நோயாளர்ளாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.கிண்ணியா சுகாதார பிரிவில் ஒருவர் டெங்கு நோய் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்துள்ளார். திருகோணமலை சுகாதார பணிமனையில் இன்று (21) … Read more

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ள வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமானது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வைபவ ரீதியாக இதனை ஆரம்பித்து வைத்தார். காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் சகல நடவடிக்கைகளும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக ஒவ்வொரு நோயாளருக்கும் தனித்தனியாக அட்டை சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகிறது. இதற்காக வெளி நோயாளர் சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளி யொருவர் தேசிய அடையாள அட்டை … Read more

விரைவில் தடையில்லா மின்சாரம்! திகதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். இன்றையதினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் எரிபொருளின் அளவு குறையும் எனவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதன் மூலம் இந்நிலையைத் தவிர்க்க முடியும் எனவும் பலர் கேன், பக்கெட், பீப்பாய்களுக்குள் எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். … Read more

காய்ச்சல், தலைவலியுடன் உடல் முழுவதும் பரவும் கொப்புளங்கள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை குரங்கம்மை வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் குரங்கம்மை தாக்கம் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதன்படி, குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோய். இது சின்னம்மையை போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் … Read more

போதும் பாதுகாப்பதை நிறுத்திவிடுங்கள்… துருப்புகளுக்கு உக்ரைன் உத்தரவு

 மரியுபோல் நகரை பாதுகாப்பதை நிறுத்துமாறு அதன் துருப்புக்களுக்கு உக்ரைன் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, சமீபத்திய நாட்களாக போரில் பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும், மரியுபோல், கெர்சன் நகரங்களை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்யா. இந்நிலையில், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து பலத்த காயமடைந்த உக்ரைன் போராளிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாக உக்ரைனின் அசோவ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. மரியுபோல் நகரத்திற்குள் கடைசி பெரிய கோட்டையாக கருதப்பட்ட … Read more

விடுதலைப் புலிகளின் தலைவரது நம்பிக்கை பொய்த்துப் போனது! தமிழர்களிடையே நடப்பது இதுதான்….

Courtesy: ஜெரா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு ஆண்டுகள் பதின்மூன்று. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் தரப்பும் சரி, இலங்கை என்கிற நாடும் சரி எதிர்கொண்ட சவால்கள் எவையென ஆராய்வது காலத்திற்குப் பொருத்தமானதாகும். தமிழர்கள் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, நிழல் அரசொன்றையே அமைத்திருந்த புலிகள், தம் மௌனிப்பின் இறுதிப்பொழுது வரைக்கும் கொள்கைகளிலிருந்து விலகவில்லை. தம் போராட்டப் பயணத்தைக் கைவிடவுமில்லை. இனத்தின் விடுதலை மீது அசையாத பற்றுறுதி கொண்டவர்கள், அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் … Read more