தமிழக மனிதாபிமான உதவி நிவாரணப் பொருட்கள் நாளை இலங்கைக்கு

தமிழ்நாடு மாநில அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் தமிழ்நாட்டின் மனிதாபிமான உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிய முதலாவது கப்பல் நாளை இலங்கையை வந்தடையவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பணிப்புரைக்கமைய, இலங்கைக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்பதாயிரம் , 200 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா, 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் என்பன அடங்கியுள்ளன. இந்த அத்தியாவசிய பொருடகள் சென்னை துறைமுகத்தில் கடந்த மே 18 ஆம் திகதி தமிழக முதல்வர் திரு … Read more

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார் – மகிந்த அறிவிப்பு

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன், எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் நீண்ட நேர மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சடுதியாக … Read more

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே21ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022மே 21ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன்.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை … Read more

இனி ஒருபோதும் நாடாளுமன்றில் பணியாற்ற மாட்டேன் – அலி சப்ரி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, இனி ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பணியாற்றப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய வருமானம் 1.4 டிரில்லியன் ரூபா எனவும், செலவு 3.4 டிரில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தை நேசிக்கும் மற்றும் முறையாக வரி செலுத்திய ஒரு நல்ல மனிதர் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழையக்கூடிய அடுத்த … Read more

இரட்டைக் குடியுரிமை விவகாரம் – பசிலுக்கு செக் வைத்த விஜயதாச ராஜபக்ச

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன்படி தற்போது இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் இரத்து செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 21வது திருத்தத்தை கொண்டு வருவதன் நோக்கங்களில் இதுவும் ஒன்று என அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு … Read more

இலங்கைக்கு உதவுவதாக அறிவித்த G7 நாடுகள் – பிரதமர் ரணில் வரவேற்பு

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு உதவுவதாக G7 நாடுகள் அறிவித்துள்ளமையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள், சமையல் எரிவாயு, உணவு மற்றும் மின்சாரத்திற்கான வெப்ப எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததுள்ளது. இவ்வாறான நிலையில், இலங்கைக்கு உதவுவதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு இலங்கைக்கு … Read more

இலங்கைக்கான விசேட பயண ஆலோசனையை வெளியிட்டது தென் கொரியா!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் தென் கொரியா இலங்கைக்கான சிறப்பு பயண ஆலோசனையை இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரிய பிரஜைகள் இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை இரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ அல்லது ஏற்கனவே இலங்கையில் இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் அவசரகால … Read more

திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டமை பாராட்டத்தக்கது – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டமை பாராட்டத்தக்கது என்று காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர் தரப்பில் இருந்த போதிலும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக  கூறினார். நாட்டுக்கு தற்போதைய சூழ்நிலையில் கட்சி அரசியலா அல்லது மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வா அவசியம் என சகல அரசியல் … Read more

கோட்டாபயவினால் விரட்டப்பட்டவருக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கிய ரணில்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சரவையின் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பலத்த இழுபறிக்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சில வாரங்களாக ரணில் நடத்திய தீவிர கலந்துரையாடலை அடுத்து இணக்கம் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 9 பேர் இன்றையதினம் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் … Read more

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் ரூபா. 3,221 மில்லியன்கள் திரட்டல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான செலவுகள் குறித்து 2022 மே 20ஆந் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, செலவீனங்களைக் குறைப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பல்வேநு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை ஆகியன உள்ளடங்கும். இதன் விளைவாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2021ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த வரவு செலவுத் … Read more