புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் – நாளை 10 பேர் பதவிப் பிரமாணம்

பத்து அமைச்சரவை அமைச்சர்கள் நாளைய தினம் (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, திரான் அலஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஈ.பி.டி.பி. … Read more

இலங்கை பாமாயில் உற்பத்திக்கு இந்தியா ஒத்துழைப்பு

இலங்கை பாமாயில் உற்பத்திக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. இலங்கை பாமாயில் உற்பத்தியாளர் ஏற்றுமதி சங்க (Palm Oil Industry Association of Sri Lanka) உயர்மட்டக் குழு , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை அண்மையில் சந்தித்தது. இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் மரக்கறி எண்ணெய் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் , இலங்கையில் மரக்கறி எண்ணெய் வரலாறுவரலாறு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது தொழில் துறையின் வளர்ச்சியை … Read more

வரிசையில் காத்திருக்கும் விசேட தேவையுடையோர் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

விசேட தேவையுடையவர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தேவையான சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.  நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து விசேட தேவையுடையவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எரிபொருள், உணவுப் பொருட்கள், சுகாதார சேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடைய இவர்களுக்கு … Read more

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள்

அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான 200 மணித்தியாலங்களை கொண்ட 25 நாள் சிங்கள மொழி பயிற்சி வகுப்பின் இறுதி நாள் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் இன்று (19) மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் … Read more

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் அமெரிக்க முதலீட்டு வங்கியின் மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் தணியும் என்றும், இதனால் பிணைமுறிகளின் பெறுமதி அதிகரிக்கும் எனறும் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே பி மோகன் தெரிவித்துள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக பிணைமுறி தொடர்பாக தற்போது காணப்படுகின்ற நிலையை விட உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமிக்கும் செயல்முறையை எளிதாக்கும் என்று வங்கி கணித்துள்ளது. இதேவேளை, மீளச் செலுத்தப்பட வேண்டிய … Read more

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முதல் நாடாக பதிவான இலங்கை

பல தசாப்தங்களில் வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் ஆசிய-பசிபிக் நாடாக இலங்கை இன்று உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது. வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நாடு தவறவிட்டதை இலங்கையின் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கமைய, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த நூற்றாண்டின் முதல் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தாத நாடு என இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகளுக்கான 30 நாள் கால அவகாசம் நேற்றைய தினம் காலாவதியானது. … Read more

கடனட்டை வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தினந்தோறும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கடன் அட்டை வாடிக்கையாளர்களின் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளதுடன் மேலும் நிலுவை தொகை அதிகரிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில் நிலுவையில் உள்ள கடன் அட்டை நிலுவை 3.9 பில்லியன் ரூபாவிலிருந்து 138.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூன்று மாதங்களில் கடன் அட்டை மீதி 5.5 பில்லியன் … Read more

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. உறுதிபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்கும் LNG தரவுக் கட்டமைப்பு செயலிழந்திருப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதி விநியோகம் தடைப்பட்டுள்ளது. அந்த ததரவுக் கட்டமைப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சேவை திருத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று திணைக்களம் விடுத்துள்ள … Read more