பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும் நெருக்கடியை காரணமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஒரு காரணமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். 13ஆவது யுத்த வீரர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.. தேசிய படைவீரர்கள் தினச் செய்தி தாய் நாட்டின் சுதந்திரத்தையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த, வீரமிக்க படைவீரர்களை  நாம் என்றும் மறக்க மாட்டோம். அவர்களின் தியாகத்தின் உயிர்ச்சக்தியை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்பதே அதற்குக் காரணம். எனவே, … Read more

நாளை பணிக்கு வரும் அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையின் அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் நாளை பணிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேபொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஐ.ஓ.சியின் அறிவிப்பு – செய்திப் பார்வை (Video)

தமது நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ.ஓ.சி அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையை அதிகரிப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், விளக்கமளித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பான எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் … Read more

தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் பேரறிவாளன் நன்றி தெரிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய உயர் நீதிமன்றம் நேற்று (18) விடுதலை செய்தது. பேரறிவாளனின் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் இனிப்பு வழங்கி விடுதலையை கொண்டாடி மகிழ்ந்தனர். தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்தார். அதன்படி நேற்று (18) சென்னை … Read more

இலங்கை வங்கிகளின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு

இலங்கை வங்கிகளின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான தீர்மானம் இன்று மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவிக்கப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் … Read more

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு ,இன்று தமிழ் நாட்டில் போராட்டம்

  பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். மாநிலம் முழுக்க பல முக்கிய இடங்களில் இன்று (19) தமிழக காங்கிரஸ் கட்சியினர் சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.பெரும் போராட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்ட்டார்.இது தொடர்பாக காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் கே எஸ் … Read more

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கiடையிலான   டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் (19) இன்றாகும். முதலாவது இன்னிங்க்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் ஆட்ட நிறைவின் போது  3 விக்கெட் இழப்புக்கு 385 ஓட்டங்களை எடுத்திருந்தது. 3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்கள் பெற்றிருந்தது. பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் … Read more

நினைவேந்தலுக்கு சென்ற பேருந்தை திடீரென சோதனையிட்ட புலனாய்வாளர்களால் முறுகல் நிலை (VIDEO)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலனாய்வாளர்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து இன்று காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளனர். இந்த நிலையில், மாணவர்களை ஏற்றுவதற்காக காலை 9 மணியளவில் பரந்தன் சந்தியில் பேருந்து நிறுத்தப்பட்டபோது நபர் ஒருவர் திடீரென பேருந்தில் ஏறி கண்காணித்துவிட்டு இறங்கியதுடன், அருகிலிருந்த கடையொன்றிற்குள் சென்றுள்ளார். இதன்போது … Read more

நுவரெலியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நுவரெலியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவும் நிலைமைகள் காரணமாக அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.