இரண்டு வாரங்கள் தாருங்கள்! வழிக்கு கொண்டு வருகிறேன்! -ரணில் நாடாளுமன்றில் கோரிக்கை!

இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கால அவகாசத்துள் ஆளும் மற்றும் எதிர்கட்சி என்ற இரண்டு தரப்பையும் ஒரு வழிப்படுத்தமுடியும் என்றும் ரணில் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இ்தனை தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆளும் கட்சி ஆதரவு வழங்குவதாக கூறியபோதும், ஆளும் கட்சி இன்னும் … Read more

கொல்கத்தா – லக்னோ அணிகளுக்கிடையில் அரையிறுதிக்கு தகுதி காணும் போட்டி இன்று

மும்பை டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று (18) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் IPL 66 ஆவது லீக் போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் விளையாடுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 10 அணிகளுக்கும் தலா 13 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் இன்னும் ஒரு போட்டியில் விளையாடவுள்ளது. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி; சுற்றுக்கு தகுதி பெறும். குஜராத் டைட்டன்ஸ் … Read more

எரிவாயு விநியோகத்தில் தாமதம் – வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

எரிவாயு விநியோக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. நேற்று காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கப்பலில் இருந்து எரிவாயுவை தரை இறக்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதனை தரை இறக்குவதற்கு இன்னும் 03 நாட்கள் தேவைப்படும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவுக்காக வந்து சவப்பெட்டி வாகனத்தில் ஊர் திரும்பிய உறுப்பினர்கள்

கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க அலரி மாளிக்கைக்கு வந்தவர்கள் சவப்பெட்டிகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியமையினால் வன்முறையாக மாறியது. இந்த நிலையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு வந்த சிலரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் பேரே ஏரியில் தள்ளிவிட்ட காட்சிகள் வெளியாகியிருந்தது. இவர்களில் கம்பஹா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட நால்வர் போராட்டக்காரர்களால் … Read more

கண்ணீரில் நனையும் முள்ளிவாய்க்கால் மண்! கதறியழும் உறவுகள் (Live)

முல்லைத்தீவு – முள்ளிவாய்காலில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 13 வருடங்களுக்கு பின்னரும் கண்ணீருடன் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  அத்துடன் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அதேவேளை முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் பிரதான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வடக்கு, கிழக்கினை சேர்ந்த பலரும் படையெடுத்து வருகின்றனர். இதேவேளை அப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.    Source link

சுற்றுலா பயணிகளின் திடீர் முடிவால் இலங்கைக்கு தொடரும் நெருக்கடி

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியே அதற்கான காரணம் என கூறப்படுகின்றது. 35 முதல் 40 வீதமான வெளிநாட்டவர்கள் தமது முன்னைய முன்பதிவுகளை இரத்து செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டிற்கு இதுவரை வந்த பெரும்பாலான வெளிநாட்டவர்கள் பெரிய அளவில் நெருக்கடியை சந்திக்கவில்லை என்றே இலங்கை வந்து சென்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில வெளிநாட்டவர்கள் இலங்கையில் … Read more

இன்று முதல் மீண்டும் விஹார மஹாதேவி பூங்காவில் கொவிட் தடுப்பூசி

கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இராணுவ கொவிட் தடுப்பு தடுப்பூசி வேலைத்திட்டம் இன்று முதல் மீண்டும் செயற்படுத்தப்படும் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையான ஆறு நாட்களிலும காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார். 20 வயதுக்கு மேற்பட்டவர்களும்இ 4வது கொவிட் தடுப்பூசியைப் பெற விரும்புபவர்களுக்கும் இங்கு கொவிட் தடுப்பூசியைப் … Read more

பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிய மகிந்த, நாமல் – குளிரூட்டப்பட்ட அறையில் சந்தேக நபர்கள்

கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலில் நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கான பட்டியலில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்காமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  இந்த சம்பவம் தொடர்பில் 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த 22 பேரின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமலின் பெயர் உள்ளடங்கவில்லை … Read more

இன்றும் (18) நாளையும் (19) பெட்றோல் விநியோகம் இல்லை : வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

பெற்றோல் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளர். தற்போது எதிர் நோக்கப்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து பாராளுமன்றத்தில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இன்று மாலைக்குள் நாட்டில் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தொடர்ந்து டீசல் விநியோகம் செய்யப்படும். தற்போது பெட்ரோலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இருப்பினும் அதனை கொள்வனவு செய்வதற்கு … Read more

டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி

டொலர் ஒன்றின் விற்பனை  பெறுமதி 364.63ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.  இதேவேளை,  டொலரின் கொள்வனவு விலை 354.66 ரூபாவாக பதிவாகியுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Source link