டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி

டொலர் ஒன்றின் விற்பனை  பெறுமதி 364.63ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.  இதேவேளை,  டொலரின் கொள்வனவு விலை 354.66 ரூபாவாக பதிவாகியுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Source link

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பாராளுமன்றத்துக்கு வருகை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.  இவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் சபை அலுவல்களில் கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Source link

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர் (Live)

கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Source link

கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள்

நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாடசாலை நேர நிறைவின் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் இந்தப் போராட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே, கள்வர்கள் தேவையில்லை … Read more

நாளாந்தம் 80 ஆயிரம் காஸ் சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை

இன்று முதல் 80 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நாளாந்தம் விநியோகிக்கப்படும் என லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். காஸ் சிலிண்டர்கள் அடங்கிய இரண்டு கப்பல்களுக்கு நேற்றிரவு பணம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இற்கமைவாக 2,800 மெட்ரிக் தொன் காஸை தரையிறக்கும் பணி நேற்றிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு: வெளியான தகவல்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிவதை மட்டுப்படுத்தல் மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.  நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் சம்பளம் குறைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி … Read more

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் – நாட்டு மக்களிடம் கோரிக்கை

  இன்றைய தினம் (18) கொழும்பு துறைமுகத்திற்கு வரவிருக்கும் கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கி விநியோகிக்கப்படும் வரை நாட்டில் பெற்றோல் கிடையாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சுமார் 2000 மெற்றிக் தொன் பெற்றோலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகித்த போதிலும் அது தேவைக்கு போதுமானதாக இல்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே, பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்திய கடன் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ள … Read more

சிறய ரக வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்கள்

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய கார்கள் மற்றும் வான்களில் இன்றைய தினம் (17) நாடாளுமன்றத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறையின் போதும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மிகக் குறைவான சொகுசு வாகனங்களே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நாடாளுமன்ற … Read more

முன்னாள் றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலைக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு (Photo)

முன்னாள் றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலைக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளுபிட்டியின் இருந்து காலிமுகத்திடல் வரை நடை பேரணியாகச் சென்றவண்ணம் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் இறந்து இன்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். Source link