ஞான அக்கா வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவம்: 8 பேர் கைது

கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞான அக்காவின் வீட்டிற்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் கடந்த வாரம் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அது வன்முறையாக மாறியது. அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட முக்கிய உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதன் போது அநுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் ஹோட்டல் … Read more

நாடு முழுவதும்,நாளை முதல் “டெங்கு” ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு நோய் பரவலைத்தடுக்க கட்டுப்படுத்தும் வகையில் நாளை (18) முதல் மே 24 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். எமது செய்தி பிரிவுக்கு இன்று (17) இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்ட அதிக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்களின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த … Read more

பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் தத்துவங்களையும் பணிகளையும், கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமற்போனதன் மீதான பாராளுமன்றத்தின் அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை இன்று (17) விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்திவைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த பிரேரணையை எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார். … Read more

பிரதமர் குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்! ரணிலை கடுமையாக சாடிய சுமந்திரன்

ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்காக நிலையியற் கட்டளையை இடைநிறுத்துவதா என்பது குறித்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த பிரதமர் ரணிலை  சுமந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தேச விவாதம் நம்பிக்கையில்லா பிரேரணையின் ஒரு பகுதியே என தெரிவித்துள்ள சுமந்திரன் … Read more

எரிபொருள் விநியோகத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை

எரிபொருளை வழங்கும் போது, விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அனுராதபுர மாவட்ட விவசாயக் குழுக்கள் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு, அதற்கான வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலாளர் ஜனக்க ஜயசுந்தரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறுபோக செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதற்காக பயன்படுத்தப்படும் ட்ரெக்டர் வண்டிகளுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால், விவசாயிகள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கான உடனடி தீர்வை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதில் … Read more

ஊடக அறிக்கை

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கௌரவ அஜித் ராஜபக்க்ஷ மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கௌரவ அஜித் ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (17) தெரிவுசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் கௌரவ அஜித்த ராஜபக்க்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், கௌரவ சமன்பிரிய ஹேரத் இதனை வழிமொழிந்தார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜேயரத்ன அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச … Read more

திருகோணமலையில் இருந்து வெளியேறிய மகிந்த:கொழும்புக்கு அருகில் தங்கி இருப்பதாக தகவல்

பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடல் கோட்டா கோ கம மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் மைனா கோ கம ஆகியவற்றின் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தி, பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு மத்தியில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் போராட்டம் … Read more

நாடு முழுவதும், நாடு முழுவதும், ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு நோய் பரவலைத்தடுக்க கட்டுப்படுத்தும் வகையில் நாளை (18) முதல் மே 24 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். எமது செய்தி பிரிவுக்கு இன்று (17) இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்ட அதிக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்களின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த … Read more

ஒரே மாதத்தில் 226 மில்லியன் ரூபாய் செலவிட்ட பிரதமர் – ரணில் எடுத்த அதிரடி நடவடிக்கை

எதிர்வரும் ஜுன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.   நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  பிரதமர் அலுவலக பராமரிப்புக்காக ஜனவரி மாதம் 92 மில்லியன் ரூபாய், பெப்ரவரி மாதம் 99 மில்லியன் ரூபாய், மார்ச் மாதம் 226 மில்லியன் ரூபாய், ஏப்ரல் மாதம் 75 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளன.   அத்துடன், பிரதமர் அலுவலகத்தின் சேவைக்காக வேறு … Read more