நாளை முதல் ,குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் வழமையான சேவைகள்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ( 2022.05.17 ஆம் திகதி )வழமை போன்று இடம்பெறும். இது தொடர்பாக .குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று(18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

வல்வெட்டித்துறை மண்ணை விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி (Photos)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  மே 18 இல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் கறைபடிந்த நாளான முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் கடந்த 12ஆம் திகதி உணர்வுபூர்வமாக தமிழர் தாயகப் பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இருந்து இன்று … Read more

நியூயோர்க்கில் சர்வதேச வெசாக் தின நினைவேந்தல்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை மற்றும் தாய்லாந்தின் நிரந்தரத் தூதரகங்கள் இணைந்து 2022 மே 13ஆந் திகதி சர்வதேச வெசாக் தினத்தின் மெய்நிகர் ரீதியான நினைவேந்தலை நடாத்தியது. 1999இல் இலங்கை மற்றும் தாய்லாந்தின் அனுசரணையுடன், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 54/115 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதுடன், இது ஐக்கிய நாடுகள் சபையில் வெசாக் தினத்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கின்றது. உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு வெசாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கையின் தூதுவர் மொஹான் பீரிஸ் மற்றும் தாய்லாந்தின் தூதுவர் … Read more

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.  சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகின்றன.   அந்தச் சேவைகளுக்காக முன்கூட்டிய திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்துக்  கொண்டு சந்திப்பை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக WWW.immigration.gov.lk  என்ற இணையத்தளம் அல்லது 0707 101 060 என்ற தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்த முடியும். தொலைபேசி எண்களை பயன்படுத்தினால், அரசு வேலை … Read more

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா…

Courtesy: ஜெரா முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நாட்கள் அருகில் வந்துவிட்டன. இந்நாளுக்கான தயார்படுத்தல் வேலைகள் தமிழர் தாயகப் பகுதிகள், புலம்பெயர் தேசங்கள், தமிழகம் என பரந்துபட்டளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பௌதீக ரீதியான இந்தத் தயார்படுத்தல்களைத் தாண்டி உள அளவிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தந்த கோர நினைவுகளை மக்கள் உரையாடவும் தொடங்கிவிட்டனர். இறுதிப் போர் நாட்களில் இறந்த தம் உறவினர்களுக்கான குடும்ப அஞ்சலிகளை வீடுகளெங்கும் நினைந்துருகிக்கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின், சமூக வலைதளங்களின் பிரதான பேசுபொருள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றியதாக மாறியிருக்கின்றது. விடாது கர்மவினை … Read more

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தல்

எரிபொருள்,உணவு.சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக விசேட தேவையுடையவர்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மாற்றம்

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க, நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 11.00 மணி முதல், நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஜனாதிபதி ஊடகப் பிரிவு 16.05.2022 … Read more

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் மகிந்த! அடம்பிடிக்கும் ராஜபக்ச சகாக்கள் (Video)

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் முகாமிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணர்தன குறிப்பிட்டுள்ளார் என இலங்கையில் இருக்கும் பிரபல அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். எமக்கு கிடைத்த தகவலின்படி, மகிந்த ராஜபக்ச டோரா படகின் மூலமாக சர்வதேச எல்லையில் இந்தியாவின் றோ அமைப்பின் பாதுகாப்பில் இருப்பதாகவே எமக்கு கிடைத்த தகவல்களின் படி அறிய முடிகின்றது. ஆனால் அவர் எந்த மாநிலத்தில் இருக்கின்றார் என்பதை எம்மால் அறிய முடியாமல் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் … Read more

நோயுற்ற மீனவரை கரைக்கு அழைத்துவர கடற்படை உதவி

கடலில் வைத்து சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், மே 15 மாலை இலங்கை கடற்படையினரால் சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்படை ஊடகங்களின்படி, உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு ‘சிந்தூர் 04’ ல் இருந்த மீனவர் ஒருவர் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் இருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார். கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் இதுகுறித்து அறிவிக்கப்பட்டதற்கு அமைய, நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்குக் கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படை அதன் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலிருந்து ‘ரனரிசி’ … Read more