எதிர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் – பிரதமர் ரணில்

எதிர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலமாக அமையுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்பாக தாம் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் இந்தக் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்தியாவுடனான வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் 3 மாதங்கள் செல்லும். அதன் பின்னர் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் … Read more

வடகொரியாவில் வைரஸ் தொற்று – நாட்டுக்கு பேரழிவாகும் கிம் ஜாங் உன் தெரிவிப்பு

வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 21 பேர் உயிர்இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வட கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அந்நாட்டுக்கு பெரும் பேரழிவாகும் என்று அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. வடகொரியா, தஜிகிஸ்தான், … Read more

முக்கிய அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ரணில்

 அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஏனைய அமைச்சர்கள் நாளைய தினத்திற்கு பின்னர் நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் விமல் வீரவங்ச மற்றும் அரசாங்கத்தின் ஏனைய பத்து சுயாதீன உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, நேற்று விமல் மற்றும் அவரது தரப்பினருக்கு கலந்துரையாடலுக்கான நேரம் வழங்கப்பட்டது. எனினும் … Read more

இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் நிவாரண நிதிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிதி

இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் நிவாரண நிதிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்திய நாணயத்தில் ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காசோலையை தமிழக  முதல்வர் ஸ்டாலினிடம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம்.காதர் மொகிதீன் சனிக்கிழமை  தமிழக தலைமைச் செயலகத்தில் சந்தித்து இதனை வழங்கினார்.

244 கைதிகளுக்கு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு 244கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே ஜனாதிபதியின்பொதுமன்னிப்பின் கீழ் இவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. சிறு குற்றங்களை புரிந்து தண்ட ப்பணம் செலுத்த முடியாத கைதிகள், 65 வயதுக்கும் மேற்பட்டோர் .மேல் நீதிமன்றங்களால் 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில், 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்தவர்கள் ஆகியோரே ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்ய ப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மோசமான நிலை – உலக தரப்படுத்தலில் பாரிய வீழ்ச்சி

உலகின் இரண்டாவது அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக, ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீபன் ஹெங்க் வழங்கிய இந்த வார பணவீக்க அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  In this week’s inflation table,#SriLanka is once again in the spotlight. On May 12th, I measured LKA’s inflation at a stunning 132%/yr. To crush inflation, Sri Lanka needs to mothball its Central Bank and install … Read more

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022 மே 16ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி … Read more

பிரதமர் ரணில் அரசாங்கம் தொடர்பில் மைத்திரிபால தலைமையில் முக்கிய முடிவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது ஆதரவை உறுதிப்படுத்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், கட்சி உறுப்பினர்கள் விக்ரமசிங்கவுடன் ஒரு சந்திப்பை கோரியுள்ளதாகவும், அதற்கான நேரம் மற்றும் திகதியை ஏற்பாடு செய்து தருமாறும் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் விக்ரமசிங்கவின் கீழ் … Read more

பிரதமர் ரணில் அரசாங்கம் தொடர்பில் மைத்திரிபால தலைமையில் முக்கிய முடிவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது ஆதரவை உறுதிப்படுத்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், கட்சி உறுப்பினர்கள் விக்ரமசிங்கவுடன் ஒரு சந்திப்பை கோரியுள்ளதாகவும், அதற்கான நேரம் மற்றும் திகதியை ஏற்பாடு செய்து தருமாறும் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் விக்ரமசிங்கவின் கீழ் … Read more

புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை: பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை

நாடு முழுவதும் காணப்படும் நிலைமைகளின் அடிப்படையில், சட்டம், ஒழுங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் குற்றங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் வாயிலாக நபர்களை வன்முறைகளில் ஈடுபடுவதற்காகவும் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் தூண்டி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இதனால், தேவையற்ற வகையில் நபர்கள் ஒன்று கூடுவதை தடுக்க வேண்டும் என பொலிஸ் மா … Read more