புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை: பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை

நாடு முழுவதும் காணப்படும் நிலைமைகளின் அடிப்படையில், சட்டம், ஒழுங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் குற்றங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் வாயிலாக நபர்களை வன்முறைகளில் ஈடுபடுவதற்காகவும் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் தூண்டி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இதனால், தேவையற்ற வகையில் நபர்கள் ஒன்று கூடுவதை தடுக்க வேண்டும் என பொலிஸ் மா … Read more

அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற சம்பவம்: சந்தேக நபர் ஒருவர் கைது

அலரிமாளிகைக்கு முன்பாக கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மொரட்டுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் மொரட்டுவை – மொரட்டுமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார் கைதானவர், மொரட்டுவை மாநகர சபையில் சேவையாற்றும் 49 வயதுடைய ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த … Read more

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையம்

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதல் இயந்திரத் தொகுதி எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் செயற்படக்கூடியதாக இருக்குமென்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தற்போது நாளாந்த மின்சாரத் தேவையில் 30 வீதத்திற்கு மேற்பட்டவை நீர் மின்னுற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. தற்போது பெய்துவரும் கடும் மழைகாரணமாக நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது. எரிபொருள் இல்லாததன் காரணமாக எரிபொருள் மூலமான மின்னுற்பத்தி அனைத்தும் தற்போது தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும்

Courtesy: கட்டுரையாளர் ச. வி. கிருபாகரன் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு தனி கட்டுரை எழுத விரும்பாத காரணத்தினால், யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, எனது கணிப்பை இங்கு சுருக்கமாகக் கொடுக்க விரும்புகிறேன். அங்கு நிலைமையைக் கணிக்க முடியாதவாறு, ஒவ்வொரு மணி நேரமும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. இதேவேளை ராஜபக்சக்கள் தம்மை காப்பாற்றுவதற்கான சகல முன்னேற்பாடுகளையும் நாளுக்கு நாள் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது, பிரதமர் மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்திருந்தாலும், ராஜபக்ச குடும்பத்தின் ஆணிவேரான ஜனாதிபதி கோட்டாபய … Read more

21ஆவது அரசியலமைப்பு திருத்தம்: பேச்சுவார்த்தை நாளை

21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நாளை இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும். இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்படும்.

மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு – பல பிரதேசங்களில் வெள்ளம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை  நீட்டிக்கப்பட்டுள்ளது நாளை மாலை 5 மணி வரை இந்த எச்சரிக்கை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கலவான மற்றும் பெல்மடுல்ல பிரதேசங்களுக்கு மூன்று கட்டங்களின் கீழ் விடுக்கப்பட்ட பொது மக்கள் பாதுகாப்பான, இடங்களுக்கு வெளியேறுவதற்கான அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு. இதேவேளை கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இரத்தினபுரி, அலபாத்த, … Read more

புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட பாரிய வெசாக்தோரணம்

புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட பாரிய வெசாக்தோரணம் நேற்று (14) வீசிய காற்றின் காரணமாக விழுந்துள்ளது. புறக்கோட்டை பொலிஸார் இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், இந்த அலங்கார தோரணத்தை மீண்டும் அமைப்பதற்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்

40,000 மெட்ரிக் தொன் டீசல்: மற்றுமொரு கப்பல் இலங்கை வந்துள்ளது

மேலும் நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் டீசல் எரிபொருளை 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்ட மற்றுமொரு கப்பல் இன்று இலங்கை வந்துள்ளது. இந்திய கடனுதவியுடன் எரிபொருள் கொண்டு வரும் 12வது கப்பல் இதுவாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இந்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்கம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளன. இதேவேளை, எரிபொருளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது. மேலும் எதிர்வரும் 29ஆம் திகதி மற்றுமொரு … Read more

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்: பணிகள் ஆரம்பம்

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் பணிகளை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பக்கத்தில் முதல் வரிசையில் 7வது ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அதே பக்கத்தில் முன் வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது. மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி என்பதால், கட்டாயம் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம்  ஒதுக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால … Read more

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்ட 68 பேருக்கு விளக்கமறியல்

கடந்த 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற 707 வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். இதேவேளை கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் நிட்டம்புவவில் இடம்பெற்ற கலவரம் … Read more