வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்ட 68 பேருக்கு விளக்கமறியல்

கடந்த 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற 707 வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். இதேவேளை கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் நிட்டம்புவவில் இடம்பெற்ற கலவரம் … Read more

ஹிந்து வெளியிட்டுள்ள புலிகளின் தாக்குதல் செய்தி – கொந்தளிக்கும் சிங்கள மக்கள்

இலங்கையில் எதிர்வரும் மே 18ஆம் திகதி விடுதலை புலிகள் அமைப்பினால் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து, உரிய பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும் ஹிந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறித்து தென்னிலங்கை மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இது தொடர்பான செய்தியின் கீழ் பதிவுகளை வெளியிட்ட சிங்களவர்கள் “ராஜபக்சர்கள் ஏதாவது ஒன்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் புலிகள் மீது பழி … Read more

நாளைய தினம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்

நாளைய தினம் ஆயிரக்கணக்கான பொலிஸார் கொழும்பு நகரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  விசேட கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விசேட கடமைகளுக்காக இந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Source link

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

உலகளவில் தங்கத்தின் விலை  குறைந்து வருகின்றது.   அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில்  இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.  அதேசயம், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை  185,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.   Source link

நாட்டில் நாளையும் மின் துண்டிப்பு இல்லை: வெளியானது அறிவிப்பு

நாட்டில் நாளைய தினம் (16) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றைய தினமும் நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். Source link

பேருந்து மற்றும் புகையிரத பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

இன்றும் (15) நாளையும் (16) தனியார் பேருந்துகளின்  சேவைகள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் பற்றாக்குறையால் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது  என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையினால், புகையிரத சேவைகள் இன்று பிற்பகல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Source link

கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பில் 47000 டொலர்கள் கண்டுபிடிப்பு

கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை நாணயத்தில் அதன் பெறுமதி 1 கோடி 71 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் வைப்பிடாமல் உண்டியல் முறையின் கீழ் டொலரின் தற்போதைய மதிப்பை விட அதிகமாக விலையில் … Read more

எரிபொருள் நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகம் இல்லை

எரிபொருள் நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை பெற்றோலிய சேமிப்பகம் அறிவித்துள்ளது.  இதேவேளை டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.  தொடருந்து டீசல் கிடைக்காவிடின் நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பேருந்துகளும் … Read more

சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலை – 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் ஓரளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வர தெரிவித்துள்ளார். இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலையால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, அயாகம, … Read more