கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளை மறிக்கும் மக்கள்: பொலிஸார் களத்தில் (Videos)

கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  கடந்த 9ஆம் திகதி நாட்டில் அசாதாரண நிலை ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலை வேளையில் தளர்த்தப்பட்டு பிற்பகல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இவ்வாறான சூழ்நிலையில் இன்று … Read more

04 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று, (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இவ்வாறு நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) பிற்பகல், ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்                                    – வெளிநாட்டலுவல்கள் 02. திரு.தினேஷ் குணவர்தன                                     – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண … Read more

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல காலமானார்

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல அவர்கள் 2022 மே 14ஆந் திகதி, சனிக்கிழமையன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குறுகிய கால சுகவீனத்தால் காலமானார் என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையில் உள்ள அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன், மறைந்த துணைத் தூதுவர் ஹூலுகல்லவின் பூதவுடல் உரிய சம்பிரதாயங்களைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,கொழும்பு2022 மே 14

ரணிலை புரிந்துகொண்ட தமிழர்களும் புரிந்துகொள்ளாத சிங்களவர்களும்

Courtesy: ஜெரா ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வீசிய ராஜபக்ச பெருஞ்சூறாவழியில் முதலில் தூக்கிவீசப்பட்டவர் ரணில் விக்ரமசிங்கதான். இனி அவருக்கு மீட்பே இல்லை, தன் சொந்தத் தொகுதியில்கூட வெல்ல முடியாத நிலைக்கு அரசியலில் சரிவைச் சந்தித்துவிட்டார் எனக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்தச் சரிவோடு அவரோடு ஒட்டியிருந்த பலரும் கட்சி மாறினார்கள். இவ்வாறு தனித்துவிடப்பட்டிருந்தவருக்குக் கட்சிக்குக் கிடைக்கவேண்டிய தேசியப்பட்டியல் என்ற ஓர் … Read more

இலங்கையில் ஒரே நாளில் அழிக்கப்பட்ட 2000 கோடி பெறுமதியான சொத்துக்கள்

இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2000 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களினால் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதற்கமைய இதுவரையில் 2000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, காப்புறுதி செய்யப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு பெருமளவிலான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளதால், காப்புறுதி நிறுவனங்கள் கடும் சிக்கலை … Read more

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் பொது மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.  அதன்படி, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தமக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளனர். தகவல் தெரிவிக்க விரும்புவோர் 1997 மற்றும் 119 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பும் 4 கோடியாக அதிகரித்துள்ளது . இன்று (14) காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :* புதிதாக 2ஆயிரத்து,858 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4கோடி,31இலட்சத்து,19ஆயிரத்து,112 -ஆக உயர்ந்தது. * புதிதாக 11 … Read more

நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்

நான்கு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். Source link

இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று (13) முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. அரசின் அனுமதி பெற்று குறிப்பிட்ட நாடுகளில் உணவு பாதுகாப்புக்காக கோதுமை அனுப்ப மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் … Read more