இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று (13) முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. அரசின் அனுமதி பெற்று குறிப்பிட்ட நாடுகளில் உணவு பாதுகாப்புக்காக கோதுமை அனுப்ப மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் … Read more

இலங்கையின் அரசியல் நெருக்கடி! துரத்தியடிக்க வேண்டிய பொது எதிரி

இலங்கையில் இன்று அரசியல், பொருளாதார மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கு அப்பால், மக்கள் மத்தியில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை  நம்பிக்கையை கட்டியெழுப்பலாகும். முக்கிய பொது எதிரி நம்பிக்கையீனம் என்பது இலங்கை மக்கள் மத்தியில் இருந்து களையப்படவேண்டிய முக்கிய பொது எதிரியாகவே இருந்து வருகிறது. இலங்கை நாடு, வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாளில் இருந்து நம்பிக்கையீனம் என்பது மக்கள் மத்தியில் வியாபித்துள்ள நோயாகவே கருதப்படுகிறது. வெளிநாட்டவர்கள், இலங்கையை ஆண்டபோது, அவர்கள் மீது இலங்கையர்களுக்கு நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கலாம் அதேபோன்று அவர்களுக்கும் இலங்கையர்கள் … Read more

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை தொடர்ந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய மில்லனிய /மதுராவளை மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எஸ். பீ. சி. சுஜீஸ்வர தெரிவித்தார். காலி மாவட்டத்தில்  நெலுவ, தவலம, நாகொட, வெலிவிட்டிய திவ்துர மற்றும் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவுகளில் தாழ்வான பகுதிகள் … Read more

ரணில் பிரதமரானதன் பின்னர் டொலர்களை வழங்கும் இன்னுமொரு நாடு!

இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. This … Read more

நாடாளுமன்றத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களின் வாகனங்களின் எரிபொருளுக்கான 56 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்படாமையால் நாடாளுமன்றத்தின் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற போக்குவரத்து சேவைக்காக 9 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் 5 தனியார் பேருந்துகளும் ஈடுபடுகின்றன. அந்த பேருந்துகளுக்கான எரிபொருள் கட்டணமாக 56 லட்சம் ரூபாய் செலுத்தப்படாமையால் அவற்றுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களுக்கு இதற்கு முன்னர் பத்தரமுல்லையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்நிலைமை காரணமாக … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்

இலங்கையை ச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 மே 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது … Read more

சில மாவட்டங்களில் மழையுடனான கால நிலை தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ … Read more

தொடரும் அரசியல் நெருக்கடி – இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்க மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானிய தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்திற்கு பயணத்திற்கு எதிராக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் அல்லது பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் பேரணி மற்றும் … Read more