வனிதா – தேவயாணி இடையே மோதல்! கடும் கோபத்தில் வனிதா செய்த விஷயம்

நடிகை தேவயானி ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அதற்கு பிறகு சின்னத்திரையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அவரது தொடர்கள் ஹிட் ஆகி வருகின்றன. தற்போது தேவயாணி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வனிதா உடன் மோதல் தேவயாணி பணியாற்றிவரும் எப்எம் சேனலில் ஒரு பேட்டி கொடுப்பதற்காக நடிகை வனிதா வருகிறார். அந்த பேட்டிகான கேள்விகளை தேவயானி தான் எழுதி கொடுக்கிறார். வனிதாவின் சொந்த … Read more

சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் புதிய பிரதமர்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் நோக்கோடு ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவி வழங்கும் நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து  கலந்துரையாடினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கான சீனத் தூதுவரைச் (Yi Xianliang) சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை பற்றி விளக்கமளித்தார்.இலங்ககைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் இதன் போது உறுதியளித்தார். ஜப்பான், அமெரிக்கா. இந்தியா ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகளையும் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கைக்கு உதவிகளை வழங்குவது பற்றி கலந்துரையாடுவதற்காக ஜப்பான் தூதுவர் … Read more

இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலைத் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்தது

இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலை 2022 மே 06 அன்று ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் தொடங்கிவைத்தது. இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தல் என்பது சுற்றாடல் ரீதியாக நிலைபெறத்தக்க பொருளாதார நடவடிக்கைகளை வரைவிலக்கணம்செய்து வகைப்படுத்துவதுடன் 2019இல் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் நிலைபெறத்தக்க நிதிக்கான வழிகாட்டலில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய செயற்பாட்டு விடயமொன்றாகக் காணப்படுகின்ற வகைப்படுத்தல் முறைமையொன்றாகும். இவ்வகைப்படுத்தலானது, பன்னாட்டு ரீதியான சிறந்த நடத்தைகளுக்கு இசைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்நாட்டு பின்னணிக்கு ஏற்றவிதத்தில் … Read more

தேர்தலில் தோற்ற ரணிலுக்கு…. அடித்த அதிர்ஷ்டம்..!! ராசியா காய் நகர்த்தலா?

கடந்த பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த ரணில் விக்ரமசிங்கவினால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என எண்ணிய பலருக்கு இன்றைய ரணிலின் அவதாரம் பிரம்மிக்க வைக்கலாம். 225 பேர் சூழ்ந்திருந்த அவையில் தனியொருவருவராக இருந்து இன்றைய இலங்கை அரசியலில் கிங் மேக்கராக திகழ்கின்றார். 1970 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தனது … Read more

வன்முறையற்ற அகிம்சை சமூகத்தை உருவாக்க – மட்டக்களப்பில் பிரார்த்தனை நடைபவணி

வன்முறையற்ற அகிம்சை ரீதியான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நண்பர்களாக ஒன்றினைந்து மட்டக்களப்பில் பிரார்த்தனை நடைபவணி இன்று (13) திகதி இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுக்கப்பட்டது. மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்த குறித்த பிரார்த்தனை நடைபவணி அமைதியான முறையில் மட்டக்களப்பு நகர மத்தியில் உள்ள காந்தி பூங்காவை சென்றடைந்தது. நடைபவணி காந்தி பூங்காவை சென்றடைந்ததும், நடை பவணியில் கலந்துகொண்டவர்கள் தமது ஆடைகளில் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தியிருந்த பல்வேறு அம்ச கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை … Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகப்பரீட்சைகள் ஒத்திவைப்பு

2020/2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு, பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான விதிகளின் கீழ் நாளை நடைபெறவிருந்த நேர்முகப்பரீட்சைகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தை விலைச் சுட்டெண்

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டதுடன், நேற்று (12) கொழும்பு பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண்களில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருந்தது. இதன்படி, அனைத்து பங்குகளினதும் விலைச் சுட்டெண் 237.99 ஆக அதிகரித்து நேற்று 7754.62 ஆக பதிவாகியது. இதேவேளை நேற்று (12) S&P Sri Lanka Twenty விலைச் சுட்டெண் 93.59 ஆல் அதிகரித்து காணப்பட்டது.

உலகில் 6 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ,ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பிற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம், உலக அரசியல் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளார். உலகில் ஆறு  முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி இவர்தான். சுதந்திர இலங்கையின் 26வது பிரதமராக, ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பதவியேற்றார். , இதன் மூலம்   இலங்கையின் பிரதமராக நேற்று (12)ஆறாவது முறையாக பதவி ஏற்றுள்ளார். 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற ஜனாதிபதியின் கீழ் மூன்றில் இரண்டு … Read more

சட்ட விரோத செயல்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் தீ வைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக எந்தவொரு அரசியல் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சில் (11.05.2022) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தனர். சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டிய அவர், குற்றச் செயல்கள் தொடர்பான அனைத்து வீடியோ காட்சிகளையும் … Read more